பூஜையுடன் துவங்கியது ஜீவா நடிக்கும் ‘கீ’!

488

“நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்” என்று நட்பை பற்றி ஆழமாக பேசும்  நாடோடிகள், ஈட்டி எனும் ஸ்போர்ட்ஸ் படம், மிருதன் எனும் ஜாம்பி படம், சிம்பு நடிப்பில் உருவாகும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் எனும் ஜனரஞ்சகமான திரைப்படம் என வெவ்வேறு களங்களில் பயணிக்கும் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட்.

இந்நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் வெற்றி படைப்பு ‘கீ’.

இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும்.

இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா, கதாநாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா சோடி , ஆர்.ஜெ. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுஹாசினி , மனோ பாலா, மீரா கிருஷ்ணன்ஆகியோர் நடிக்கின்றனர்.

கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ் இவர் இயக்குநர் செல்வ ராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இன்று பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெறவுள்ளது.