குரங்குக்கு பதில் ஜெயம் ரவி

805

கோடம்பாக்கத்தில்  copycatகளுக்கு பஞ்சமே இல்லை.

சிறந்த இயக்குநர்கள் என்று மக்கள் தலையில்  வைத்து கொண்டாடும் பல இயக்குநர்கள் பிறமொழி படங்கள், டிவி சீரியல், புத்தகங்களிலிருந்து திருடி படம் எடுப்பவர்கள்தான்.

மணிரத்னம், ராஜீவ்மேனன், கெளதம் மேனன், மிஷ்கின் மட்டுமல்ல, இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் இந்த குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்தான்.

அவர் இயக்கிய ஏறக்குறைய எல்லாப்படங்களுமே ஏதோ ஒன்றின் தழுவலாகவே இருப்பதாக தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்.

விக்ரமை வைத்து   இயக்கிய தெய்வத்திருமகள் படம் I Am Sam படத்தின் அப்பட்டமான காப்பி என்ற தகவல் அம்பலமாகி அநியாயத்துக்கு அசிங்கப்பட்டார் விஜய்.

இந்நிலையில், ‘ஜெயம்’ ரவி நடிக்கும் ‘வனமகன்’ படத்தை இயக்கியுள்ளார் ஏ.எல்.விஜய்.

இப்படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் வனமகன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிலேயே இது நிச்சயமா ஆங்கிலப்படத்தின் காப்பிதான் என்பதை உணர்த்திவிட்டது.

டார்ஜான், கிங்காங் படங்களின் கலவையாக இருக்கும் என்ற யூகத்தை உண்மையாக்குவதுபோல் உள்ளது வனமகன் படத்தைப் பற்றி வெளியாகும் தகவல்கள்.

‘பேராண்மை’ படத்தில் காட்டையும், நாட்டையும் பாதுகாக்கப் போராடும் இளைஞனாக நடித்த ‘ஜெயம்’ ரவி வனமகன் படத்தில் காட்டையும், வன விலங்குகளையும் பாதுகாக்க போராடும் இளைஞனாக நடித்துள்ளார்”  என்று பில்ட் அப் கொடுக்கப்படுகிறது.

உண்மையில் வனமகன் படத்தின் கதையே வேறு.

காட்டிலேயே வாழும் டார்ஜான் டைப்பான இளைஞனான ஜெயம்ரவி, ஊருக்குள் வருகிறார். வந்த இடத்தில் கதாநாயகியைப்பார்த்து காதலாகி, அவரை கூட்டிக்கொண்டு காட்டுக்குள் போய்விடுகிறார். ஜெயம்ரவி போட்டுத்தள்ளிவிட்டு, கதாநாயகியை மீட்க  ஒரு கூட்டம் காட்டுக்குள் செல்கிறது.

கதாநாயகி மீட்கப்பட்டாரா? ஜெயம்ரவி என்ன ஆனார்?

இதுதான் வனமகன் படத்தின் கதை.

மொத்தத்தில் குரங்குக்கு பதில் ஜெயம் ரவி.