நழுவிய விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்ட ஜெயம்ரவி

71

‘ஜெயம்’ ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கியவர் லக்‌ஷ்மன்.

இப்படத்தின் வெற்றியை அடுத்து இவரது இயக்கத்தில் ‘போகன்’ என்ற படத்தில் நடித்தார் ஜெயம்ரவி.

போகன் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய தோல்வியடைந்தது.

எனவே லக்‌ஷ்மனுக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. விஜய் சேதுபதியை வைத்து அடுத்தப் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார் லக்‌ஷ்மன்.

போகன் தோல்விப்படம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்காமல் நழுவிவிட்டார் விஜய்சேதுபதி.

எனவே மீண்டும் ஜெயம்ரவியை சந்தித்து தன்னுடைய படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்ட லக்‌ஷ்மன், அவருக்கு ஒரு கதையையும் சொல்லி இருக்கிறார்.

அவர் சொன்ன கதை ஜெயம்ரவிக்குப் பிடித்துப்போனதை அடுத்து இந்த கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அடங்கமறு’ ‘ஜெயம்’ ரவியின் 24-வது படம்.

‘ஜெயம்’ ரவியின் 25-வது படத்தை லக்‌ஷ்மன் இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஜெயம்ரவியின் மாமியாரும், ‘அடங்கமறு’ படத்தை தயாரித்தவருமான சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

‘ஜெயம்’ ரவி நடிக்கும் படத்திற்கு டி.இமான் இசை அமைப்பது இது நான்காவது முறை. ‘இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க இருக்கிறது.