இது நம்ம ஆளு படத்துக்கு இரண்டு பக்கமும் இடி…..!

632

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உட்பட பலர் நடித்துள்ள படம் – ‘இது நம்ம ஆளு’.

இப்படத்தை டி.ராஜேந்தர்ர்ர் தயாரிக்க, முதல் பிரதி அடிப்படையில் லைன் புரட்யூசராக தயாரித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

குறளரசனை இசையமைப்பாளராகப் போட்டதால் அவரால் குறித்த நேரத்தில் ட்யூன் போட்டுக் கொடுக்க முடியாமல்போக….

பிறகு அனிருத்தை வைத்து பட்டி பார்த்து மெட்டை ரெடி பண்ணினார்கள்.

இந்த காமெடிகள் நடந்து முடிவதற்கள் சில வருடங்கள் ஓடிப்போயின.

இப்படியாக வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்ட இது நம்ம ஆளு படத்தை எப்படியாவது மார்ச் மாதம் வெளியிட்டே ஆக வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் டி.ராஜேந்தர்ர்ர்.

அதற்கான முயற்சியில் டி.ராஜேந்தர்ர்ர் இறங்கியநிலையில் இது நம்ம ஆளு படத்தின் பேரில் பல கோடி பைனான்ஸ் கொடுத்த வெண்கோவிந்தா என்பவர் இது நம்ம ஆளு படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்குப்போட்டிருக்கிறார்.

அந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வருமோ என்ற அச்சத்தில் இருக்கிறார் டி.ராஜேந்தர்.

இன்னொரு பக்கம், வாலு படத்தை வாங்கி மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களும் இது நம்ம ஆளு படத்துக்கு எதிராக தற்போது திரண்டு வருகின்றனர்.

வாலு படத்தைப் பற்றி டி.ஆர். கொடுத்த பில்ட் அப்பை நம்பி பெரிய தொகையைக் கொடுத்து அந்தப் படத்தை வாங்கினார்கள்.

சிம்பு நடித்த போடா போடியைவிட மிக மோசமாக தோல்வியடைந்த வாலு படத்தினால் போட்ட முதலீடு மொத்தத்தையும் இழந்தனர் விநியோகஸ்தர்கள்.

சுமார் 8 கோடியில் இது நம்ம ஆளு படத்தை தயாரித்த டி.ராஜேந்தர்ர் தமிழக வெளியீட்டு உரிமையை மட்டுமே 12 கோடிக்கு விற்றுள்ளார்.

பிற ஏரியாக்களையும் சேர்த்தால் சுமார் 25 கோடி லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

எனவே வாலு படத்தில் நஷ்டம் அடைந்த எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று இப்போது போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளனர் பாதிக்கப்பட்ட விநியோகஸ்ர்கள்.

வெண் கோவிந்தா போட்ட வழக்கும் ஒரு பக்கம்…. வாலு பட விநியோகஸ்தர்களின் எதிர்ப்பு இன்னொரு பக்கம்…..

இதன் காரணமாக, வாலு படத்தின் ரிலீஸ் போலவே இது நம்ம ஆளு படத்தின் ரிலீஸிலும் பஞ்சாயத்துக்கு பஞ்சமிருக்காது என்று தோன்றுகிறது.