இருளர் வாழ்வியலை கூறும் ‘இருளி’ திரைப்படம்

116

சமீபத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது வரை சென்ற ‘ஜெய்பீம்’ படம், இருளர் வாழ்வின் ஒரு பகுதியை காட்டியிருந்தது.

தற்போது ஒரு புதிய திரைப்படம் முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகிறது. இருளர்கள் வாழ்க்கை கதையில் ஒரு அருமையான காதல் திரைப்படமாக உருவாகும் படம் தான் ‘இருளி’ திரைப்படம்.

முருகனுக்கு இனியவன் பி.ஶ்ரீராம் தேவா, செவ்வானம் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்க, இயக்குநர் மதன் கேப்ரியல் இப்படத்தை இயக்குகிறார்.

முரளிதரன் கதை எழுதியுள்ளார். வரும் 17.02.2022 அன்று மாசிமக பௌர்ணமி நாளில் கனடா நாட்டு டொரொண்டோவில் பாடல் பதிவு நடக்க, இங்கு மாமல்லபுரம் கடற்கரையில் முதல்கட்ட படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கவுள்ளது.

பி.பி.பாலாஜி இசையில் அ.ப.ராசா பாடல் வரிகளுக்கு செந்தில் கணேஷ், ராஜலஷ்மி, முத்துச்சிற்பி, மும்பை ஹம்சிகா ஐயர், ரோஷினி, விதுயனி பரந்தாமன், சாய் சரன் முதலானோர் பாடுகிறார்கள்.

வரன் ஒளிப்பதிவு செய்ய இணைப்பதிவை பிரபாகரன், பாபு உதயகுமார், ஹரி சாந்தன் செய்கின்றனர். நிர்வாக தயாரிப்பை சந்துரு செய்கிறார்.

இப்படத்தில் செந்தில் கணேஷ்(ராஜலஷ்மி), டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா முதலானோருடன்..

நடிப்பு மெத்தர்டு ஆக்டிங் பயிற்சி பெற்ற மாணவர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

முழுக்க முழுக்க இதுவரை திரைத்துறை கண்டிராத, இசை மற்றும் நடனம் ஒன்றாக கலந்த இருளர்கள் வாழ்வியலை இப்படம் காட்டவுள்ளது.

அதனுடன் உணர்வுபூர்வமான காதல், கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த படமாக இப்படம் உருவாகவுள்ளது.