‘இது நம்ம ஆளு’ தியேட்டர்களில் ‘இறைவி’… தமிழகத்தில் 450 தியேட்டர்களில் வெளியீடு…

606

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, ராதாரவி, அஞ்சலி, கமாலினி முகர்ஜி  நடித்துள்ள ‘இறைவி’ படம் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகிறது.

ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து  ‘இறைவி’ படத்தை தயாரித்துள்ளன.

இந்த மூன்று நிறுவனங்களுமே படத்தயாரிப்பில் மட்டுமல்ல பட விநியோகத்திலும் கரை கண்டவர்கள்.

ஆனாலும்,  இறைவி படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் எனும் தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்திடம் விற்றுள்ளனர்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய முந்தைய படங்களின் மற்றும் விஜய்சேதுபதி நடித்த முந்தைய படங்களின் விலையைவிட பல மடங்கு  அதிக தொகை கொடுத்து இறைவி உரிமையை கே.ஆர்.பிலிம்ஸ் வாங்கியுள்ளது.

பெரும் தொகை கொடுத்ததால் மட்டும் இறைவி படத்தை கே.ஆர்.பிலிம்ஸுக்கு விற்கவில்லை.

படவிநியோகத்தில்  கே.ஆர். பிலிம்ஸ் சரவணனின் அணுகுமுறை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதால்தான் அவருடன் வர்த்தகம் செய்ததாக சொல்கிறார்கள் இறைவி தயாரிப்பாளர்கள்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தை கே.ஆர்.பிலிம்ஸ்தான் தமிழகம் முழுக்க விநியோகம் செய்தது!

ஒவ்வொரு தியேட்டர்களிலும் எந்த காட்சியில் எவ்வளவு வசூல் போன்ற தகவல்களை குறிப்பிட்ட மெயில் ஐடிக்கு அனுப்ப வைத்து, அதன் பாஸ்வேர்டையே விஜய் ஆண்டனிக்குக் கொடுத்துவிட்டனர். தன் படத்தின் வசூலை அவரே நேரடியாக தெரிந்து கொள்ளும்படியான ஏற்பாட்டை செய்திருந்தார் சரவணன்.

இந்த வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வியாபாரம்தான் கோடம்பாக்கத்தில்  கே.ஆர்.பிலிம்ஸுக்கு  கூடுதல் கவனத்தை பெற்றுத்தந்திருக்கிறது.

கே.ஆர்.பிலிம்ஸ் வெளியிட்ட முதல் படமான பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்தது.

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து ‘காக்காமுட்டை’ பட இயக்குநர் மணிகண்டன் இயக்கிய குற்றமே தண்டனை படத்தை வாங்கியுள்ளது கே.ஆர்.பிலிம்ஸ்.

அதற்கு முன்னதாக, பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் கார்த்திக் சுப்பராஜின் ‘இறைவி’ யை  இப்போது வெளியிடுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 450க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இறைவி வெளியாகிறது.

கடந்த வாரம் வெளியான இது நம்ம ஆளு படம் பல தியேட்டர்களில் இருந்து சில நாட்களிலேயே தூக்கப்பட்டது.

அந்த தியேட்டர்கள் எல்லாம் இறைவியை திரையிடுகின்றனர்.