சேரி பக்கம் வாங்க ராசா! இளையராஜாவுக்கு அழைப்பு…!

1159

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இளையராஜா.

சினிமாவில் புகழ் பெற்று உச்சத்தைத் தொட்டதும், தன் சாதியை வெளியே சொல்லவே சங்கடப்பட்டார்.

அதுமட்டுமல்ல, தன்னை பிராமணராக நினைத்துக்கொள்ளவும் முற்பட்டார்.

இன்றும், மனதளவில் பூணூல் போடாத பிராமணராகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இளையராஜா, நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார்.

யாருடன் தெரியுமா? மதுரையைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் சசிகுமார் என்பவருடன்.

இளையராஜாவின் பிராமணத்தனம் பலரையும் கொந்தளிக்க வைத்தது.

எவிடென்ஸ் கதிர் என்ற சமூச சேவகர், ‘கொஞ்சம் சேரி பக்கம் வாங்க’ என்று இளையராஜாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தொடர்ந்து தலித்களுக்காகவும், பெண்களுக்காவும், தனி மனித உரிமைகளுக்காகவும் சட்ட ரீதியாக போராடி வரும் எவிடென்ஸ் அமைப்பின் கதிர், இந்த அழைப்பை தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ளார்.

இளையராஜாவின் இசையை மட்டுமல்ல, அவரின் தீவிர பக்தியையும் உலகம் அறியும். அடிக்கடி கோயில்களுக்கு செல்லும் வழக்கம் உடையவர் இளையராஜா. நேற்று மதுரை மீனாட்சி அம்மனின் கோயிலில் சாமி தரிசனம் செய்ததாக ஒரு செய்தி இன்றைய நாளிதழ்களில் வந்துள்ளது. அந்த செய்தித்துண்டுடன், தனது அழைப்பை விடுத்திருக்கிறார், கதிர்.

எவிடென்ஸ் கதிர் விடுத்திருக்கும் அந்த அழைப்பில்…

“எத்தனை ஆண்டுகள்தான் மீனாட்சி அம்மனையே சுற்றி வருவீங்க..கொஞ்சம் சேரி பக்கம் வாங்க. மக்களை பாருங்க.. நான் ஏன் வரணும்? அப்படினு நீங்கள் கேள்வி கேட்கலாம். ஆனால் வந்துதான் ஆகணும். எத்தனை காலம்தான் இப்படியே இருப்பிங்க..சேரியை கொண்டாடுங்க.. நீங்கள் அடைந்த எல்லா பேரும் புகழை விட கூடுதலாகவே கிடைக்கும். சில சமயம் நீங்கள் பண்ற எரிச்சலை இந்த சமூகம் பொறுத்து கொள்ளுகிறது என்றால், அதற்கு காரணம் கடவுளும் இல்லை. இசையும் இல்லை. எங்கள் சேரிக்கு பயந்துதான். ஆகவே நந்தினி வீட்டுக்கு போங்க. இளவரசன் வீட்டுக்கு போங்க. நாடகம் போட்டது போதும். நிஜத்தை உணருங்கள். உங்கள் இசை மேலருந்து வரல.. எங்கள் சேரியில் இருந்துதான் வந்து இருக்கு.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எவிடென்ஸ் கதிர் மட்டுமல்ல, இன்னும் ஏழாயிரம் கதிர்கள் அழைத்தாலும் இளையராஜவின் காதில் விழாது என்பதே நிதர்சணம்.