மாவீரன் கிட்டு – மனதுக்கு நெருக்கமான கதை

704

இயக்குநர் சுசீந்திரனின்  மாவீரன் கிட்டு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படத்தில் பங்குபெற்ற விஷ்ணு விஷால், பார்த்திபன் , ஸ்ரீ திவ்யா , தயாரிப்பாளர்கள் சந்திர சாமி, தாய் சரவணன், இசையமைப்பாளர்  இமான், ஒளிப்பதிவாளர்  சூர்யா, எழுத்தாளர் – கவிஞர் யுகபாரதி ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக அம்மா கிரியேஷன் டி.சிவா , இயக்குநர் பா.ரஞ்சித் , பாண்டி ராஜ் , ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கவிஞர் யுகபாரதி என்ன சொல்கிறார்…?

“ மாவீரன் கிட்டு திரைப்படம் எனக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான படம், இப்படத்தில் நான் முதன் முறையாக வசனம் எழுதியுள்ளேன்.

இப்படம் தமிழ் சினிமாவில் எனக்கு  மிக முக்கியமான திரைப்படம். இப்படம் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக இருக்கும்.

நான் எதிர்காலத்தில் வாய்ப்பு வந்தால் திரைக்கதை எழுத்தாளராகவும் மாறவுள்ளேன்.

நான் திரைக்கதை எழுதினால் தயாரிப்பாளர் சந்திர சாமி அவர்களின் படத்துக்குத்தான் முதலில் எழுத வேண்டும் என்று தயாரிப்பாளர் சந்திர சாமி கேட்டுள்ளார்.

வருங்காலத்தில் எனக்கு பாடல், வசனம், திரைக்கதை எழுத வாய்ப்பு ஒன்றாக வந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.”என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் என்ன சொல்கிறார்…?

“இப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் மாற்றுகருத்தில்லை.

இப்படம் சமூகத்தில் நடக்கும் மிகமுக்கியமான கதையை பேசும் திரைப்படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இயக்குநர் சுசீந்திரன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு அவர் இயக்கிய “ வெண்ணிலா கபடி குழு “ திரைப்படம் எனக்கு பிடித்த திரைப்படம்.

அப்படத்தில் கிராமத்து விளையாட்டு போட்டிகளில் நடக்கும் அரசியலை பற்றி தெளிவாக பேசி இருப்பார் இயக்குநர்.

இப்படத்தில் “காதலை “ பற்றி ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது , காதல் நிச்சயம் இச்சமூகத்தை மாற்றும். மாவீரன் கிட்டு கமர்ஷியல் ரீதியாகவும் நிச்சயம் வெற்றி படமாக அமையும்” என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியபோது , “எனக்கு இப்படத்தின் கதை மனதுக்கு நெருக்கமான கதையாகும்.

இப்படம் தென்னகத்தில் நடந்த மிக முக்கியமான சம்பவத்தை பற்றி பேசும் படமாக இருக்கும்.

மாவீரன் கிட்டு சமூகத்துக்கு மிக முக்கியமான திரைப்படம் அது நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

இயக்குநர் / நடிகர் பார்த்திபன் பேசியபோது… “யுகபாரதி நான் நன்றாக வசனம் பேசியுள்ளேன் என்று கூறினார்.

ஆனால் அந்த வசனம் நன்றாக இருந்ததனால் தான் என்னால் அந்த வசனத்தை நன்றாக கூற முடிந்தது. இயக்குநர் சுசீந்திரன் எப்போதும் Perfect ஆக படத்தை இயக்கும் ஓர் இயக்குநர். இயக்குநர் பிரபுதேவா ஒரு நாயகிக்கு நடனம் கற்று கொடுக்க இரண்டு நாள், Perfectionனுக்கு 8  நாள் ஆகும் என்று கூறினார்.

அதே போல் Perfectionனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுசீந்திரன்.

இப்படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ திவ்யா மிகச்சிறந்த நடிகை.  ஏனென்றால் நான் அழவேண்டிய காட்சியில் இயக்குநர் சுசீந்திரன் ஸ்ரீ திவ்யாவை Glycerine போடுமாறு கூறியதும் அவர் மறுப்பேதும் கூறாமல் அக்காட்சி நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் முகம் பிரேமில் வராது என்று தெரிந்தும் நடித்தார்.

இவ்வாறு படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்தார்கள். இப்படத்துக்கு பின்னர் விஷ்ணு மகா விஷ்ணுவாக மாறிவிடுவார்” என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசியபோது,  “இப்படத்துக்காக இசையமைப்பாளர் இமான் மிகச்சிறப்பான பாடல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியது போலவே இப்படத்துக்கு இதயத்தில் இருந்து பாடல்களை தந்துள்ளார்.

எனக்கு நடிகர் பார்த்திபனை விட இயக்குநர் பார்த்திபனை மிகவும் பிடிக்கும் ஏன்னென்றால் அவர் கமல் ஹாசனை போல் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்பவர். விஷ்ணு விஷால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.

வெண்ணிலா கபடி குழு படத்துக்கு பின்னர் இப்படத்துக்காக நான் விஷ்ணு விஷாலுடன் எட்டு வருடத்துக்கு பிறகு அதே கணக்கம்பட்டி சென்றிருந்தேன். அங்கு மக்கள் எங்களை நன்றாக நியாபகம் வைத்து எங்களுடன் பேசி படப்பிடிப்பு நன்றாக நடக்க ஒத்துழைத்தனர்.

விஷ்ணு விஷாலுடன் நான் இது வரை மூன்று திரைப்படங்கள் இணைந்து பணியாற்றிவிட்டேன். நான்காவது திரைப்படத்தில் அவருடன் இணைய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படபிடிப்பு நன்றாக நடக்க மிகமுக்கிய காரணமாக இருந்த என் தம்பி தாய் சரவனன்னுக்கு நன்றி அவர் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து படபிடிப்பு நன்றாக நடக்க உதவினார்.

மாவீரன் கிட்டு நான் எடுத்த படங்களில் மிகச்சிறந்த படமாகவும் கமர்ஷியலாக வெற்றிபெறும் படைப்பாகவும் இருக்கும்” என்றார் இயக்குநர் சுசீந்தரன்.