விருட்டென புறப்பட்ட விக்ரம்… வெறுப்பேற்றிய ஹாரிஸ் ஜெயராஜ்…

1245

தழிழ்சினிமாவில் பல நடிகர்கள்… நடிகைகள்…. இயக்குநர்கள்… இசையமைப்பாளர்கள்… கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் அந்த பணத்தை… பகட்டை 100 சதவிகிதம் வெளியே காட்டிக் கொள்வதில்லை.

இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு பயந்தோ அல்லது எளிமையானவர் என்று பெயர் வாங்குவதற்காகவோ தன் வசதி வாய்ப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கி வாசிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படிப்பட்டவர் இல்லை.

img-20160914-wa0026சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்து வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் ஸ்டைலே, அந்தப் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கையை சொட்ட சொட்ட அனுபவிப்பதுதான்.

அவர் அணிந்திருக்கிற செருப்பு விலை 30 ஆயிரம், பெல்ட் விலை 10 ஆயிரம், அவருடைய டிரஸ் 1 லட்சம் என தான் சம்பாதிக்கும் பணத்தை படு ஆடம்பரமாக செலவழிப்பதில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு அலாதி விருப்பம்.

செருப்புக்கே 30 ஆயிரம் செலவு செய்கிறவர்… காருக்கு எவ்வளவு செலவு செய்வார்?

இதுவரை  சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான ஹம்மர் காரை பயன்படுத்தி வந்த ஹாரிஸ் ஜெயராஜ், சமீபத்தில்  உலகிலேயே படு காஸ்ட்லியான கார்களில் ஒன்றான லம்போர்கினி (Lamborghini) என்ற காரை வாங்கி இருக்கிறார்.
img-20160914-wa0027
ஏறக்குறைய நம் இடுப்பு உயரம்தான் இருக்கிறது லம்போர்கினி  கார். தீம்பார்க்குளில் குழந்தைகள் விளையாடும் பேட்டரி கார் போன்ற தோற்றம்தான். ஆனால் விலை சுமார் 8 கோடியாம்.

இருமுகன் படத்தின் சக்சஸ் மீட்டுக்கு இந்த காரில்தான் வந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.

படத்தின் நாயகனான விக்ரம் ஆடி காரில் வந்திருந்தார்.

சக்சஸ் மீட் முடிவடைந்ததும் வெளியே வந்த விக்ரமை  டி.வி. கேமிராக்கள் மொய்த்தன.

கூடவே சினிமா நடிகர்களை முன்னே பின்னே பார்த்திராத ஆர்வக்கோளாறு மீடியா ஆட்களும் செல்ஃபி எடுக்க முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.

அவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் விக்ரம்.

img-20160914-wa0020அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

விக்ரமை கடந்துபோய் தன்னுடைய லம்போர்கினி காரை ஸ்டார் பண்ணினார் ஹாரிஸ் ஜெயராஜ்.

அவ்வளவுதான்… விக்ரமை சுற்றி நின்று கொண்டிருந்த கேமிராக்களும், ஆர்வக்கோளாறு மீடியா ஆட்களும்  ஹாரிஸ் ஜெயராஜின் காரை நோக்கி ஓட்டம் எடுத்தார்கள்.

“நடிகனைவிட காருக்குத்தான் மதிப்பு. ஹூம்…”

நொந்துபோன விக்ரம் விருட்டென காரை கிளப்பிக்கொண்டு போனார்.