‘அழகிய கண்ணே’ படத்திற்காக பாடல் பாடிய ஜி.வி. பிரகாஷ் குமார்

9

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”.

இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.

அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன்,விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள் .

என்.ஆர்..ரகுநந்தன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் ,பாடகர் , இசையமைப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த ஜி.வி. பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் .

இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது என நடிகர் லியோ சிவக்குமார் கூறியுள்ளார் .

நடிகர்கள் :லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி,பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ்

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – ஆர்.விஜயகுமார்

தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்)

பாடல்கள் – வைரமுத்து

இசை – என்.ஆர்..ரகுநந்தன்

ஒளிப்பதிவு – ஏ.ஆர்.அசோக் குமார்