பாண்டியராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் – ‘செம’

414


இயக்குநர் பாண்டிராஜ் தன்னுடைய உதவியாளர் வள்ளிகாந்த்தை செம படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார்.

வள்ளிகாந்த் தன் நண்பர் ஒருவர் திருமணம் செய்வதற்காக சந்தித்த நகைச்சுவையான அனுபவங்களை கதையாக சொல்ல கதையை மிகவும் ரசித்த பாண்டிராஜ்.

இதை நாமே தயாரிக்கலாமே என்று முடிவு செய்து,பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அவரின் நண்பர் பி.ரவிச்சந்திரனின் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிப்பதுடன் வசனமும் எழுதுகிறார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிப்பதோடு இசையமைத்திருக்கிறார்.

‘அர்த்தனா’ கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா நடிக்கின்றனர்.

‘ஜனா’ என்பவரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார், பிரதீப் ஈ.ராகவ் எடிட்டிங், ஜெ.கே.அருள்குமார் கலை இயக்குனர், யுகபாரதி, ஏகாதசி பாடல்கள் எழுதுகின்றனர்.

காதலும் நகைச்சுவையும் கலந்த இந்தப்படம் திருச்சி சென்னை பின்புலத்தில் தயாராகி, தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.