கலைப்புலி எஸ் தாணு வெளியிடும் கன்னடப்படம்

596

மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம்.

கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரத்தை விவரிக்கும், பிரமாண்ட படம் ‘குருக்ஷேத்ரம்’.

குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

3Dயில் உருவாகியுள்ள இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

விருஷபாத்ரி புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தமிழில் வெளியிடுகிறார்.

கன்னட இயக்குநர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனனாக தர்ஷன், கர்ணனாக அர்ஜுன், கிருஷ்ணராக வி. ரவிச்சந்திரன், அர்ஜுனனாக சோனு சூட், சகுனியாக ரவி ஷங்கர், சையியாக ராக்லைன் வெங்கடேஷ், திரௌபதியாக ஸ்நேகா என கன்னடத்திரையுலகின் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ.நி. ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டுள்ளனர்.

பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.