கழுதையாக மாறிய கௌதம் வாசுதேவ் மேனன்…!

734

நாய் வேஷம் போட்டால் குலைக்க வேண்டும்….

கழுதை வேஷம் போட்டால் உதைக்க வேண்டும்

என்ற சூட்சுமத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

அதனால்தான், இம்சை அரசனான சிம்புவை வைத்து படத்தை எடுக்க முன் வந்ததோடு, முக்கால்வாசி படத்தையும் முடித்துவிட்டு தெம்பாகவும் இருக்கிறார்.

நடிகர்களுக்கு ஏற்றவாறு படப்பிடிப்பை திட்டமிடுவதில் கௌதம் மேனனை கில்லாடி என்பார்கள் படத்துறையில்.

அஜித்தை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாது.

இதை தெளிவாகப்புரிந்து கொண்டு, மக்களின் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் பின்னி மில் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தி ‘என்னை அறிந்தால்’ படத்தை எந்தப் பிரச்சனையு மின்றி எடுத்து முடித்தார்.

‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன்.

சிம்புவின் டார்ச்சரையும் மீறி ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தின் ‘டாக்கி போர்ஷனு’க்கான படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டதாம்.

ஒரு சில பாடல்களைத் தவிர்த்து படத்தின் 95% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் தகவல்.

ராத்திரி முழுக்க சரக்கடிப்பது, சல்லாபத்தில் திளைப்பது என ஜாலியாக இருந்துவிட்டு அதிகாலையில்தான் உறங்கப்போவார் சிம்பு.

அதனால் அவருக்கு பொழுதுவிடிவதே மதியத்துக்கு மேல்தான்.

போதாக்குறைக்கு கடந்த சில மாதங்களாக கஞ்சா பழக்கத்துக்கும் அடிமையாகிக் கிடக்கிறார் சிம்பு..

இப்படிப்பட்ட ஏராளமான நற்குணங்களைக் கொண்ட சிம்புவை வைத்து எந்த பிரச்சனையுயில்லாமல் எப்படி படத்தை எடுத்தார் கௌதம் மேனன்?

மட்டையாகிக் கிடக்கும் சிம்புவை வைத்து பகலில் படப்பிடிப்பு நடத்தினால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த கௌதம் மேனன், கதையில் சின்னச்சின்ன மாற்றங்களை செய்து பெரும்பாலும் இரவு நேரத்திலேயே படப்பிடிப்பை நடத்திமுடித்திருக்கிறார்.

அச்சம் என்பது மடமையடா என்ற தலைப்பு கதைக்குப் பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ கௌதம் மேனனுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது?.