சீட்டு கம்பெனியின் சினிமா ஸ்டுடியோ… Comments Off on சீட்டு கம்பெனியின் சினிமா ஸ்டுடியோ…

கோகுலம் சிட்பண்டை  தெரியாத சென்னைவாசிகள் இருக்க முடியாது.

பல வருடங்களாக செயல்பட்டு வரும் கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தின் அதிபரான கோபாலன் சத்தமில்லாமல் சினிமா தொழிலிலும் முதலீடு செய்திருக்கிறார்.

பழசிராஜா உட்பட பல மலையாளப்படங்களை தயாரித்துள்ள கோபாலன், கமல் நடித்த தூங்காவனம் படத்தையும் தயாரித்தார்.

இந்நிலையில், தற்போது  சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பன் சாவடியில் ஜி ஸ்டுடியோ என்ற  ஸ்டுடியோவை தொடங்கி இருக்கிறார்.

இந்த ஸ்டுடியோவை பல திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் கமல்ஹாசன்   திறந்து வைத்தார்.

இளையராஜா குத்து விளக்கு ஏற்றினார்.

“எனது இல்லத்திற்கு பிறகு நான் அதிகமாக வாழ்ந்த இடம் ஸ்டுடியோக்கள்தான்.

தென்னிந்திய திரையுலகின் பெருமைக்குரிய பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டதை கேள்விப்பட்டு நான் மிகவும் மன வேதனை அடைந்தேன்.

திரையுலகிற்கு  கோபாலன் செய்திருக்கும் இத்தகைய அர்ப்பணிப்பை ‘தர்மா’ என்று தான் நான் சொல்லுவேன்.

ஒரு காலத்தில் எப்படி ஆற்காடு சாலை ஸ்டுடியோக்களின் அடையாளமாக திகழ்ந்ததோ,  அதே போல் இந்த ஜி – ஸ்டுடியோ மூலம் விரைவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் தமிழ் சினிமாவின் மையமாக திகழும்.

வர்த்தகம் என்பதை தாண்டி சினிமா மீது  காதல் இருந்தால் தான் இத்தகைய பிரம்மாண்ட ஸ்டுடியோவை திரையுலகிற்கு அர்ப்பணிக்க முடியும்” என்று வாழ்த்தினார் கமல்ஹாசன்.

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், “சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில், தலை சிறந்த ஸ்டுடியோ ஒன்று  தற்போது நிறுவப்பட்டிருக்கிறது. இனி மற்றவர்களை விட நாங்கள் ‘உள்கட்டமைப்பில்’  எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை பெருமையோடு சொல்லலாம்” என்று பாராட்டினார்.

நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர், “இது போன்ற மிக பிரம்மாண்ட ஸ்டுடியோ, சென்னையில் நிறுவப்பட்டிருப்பது தனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்று கூறினார்.

‘ஜி – ஸ்டுடியோஸின் ‘ நிர்வாக இயக்குநர் பிரவீன் “இந்த ஸ்டுடியோ துவங்கும் திட்டத்தை எங்களுக்கு அளித்தவர் கமல்ஹாசன்தான்.  பல ஹாலிவுட் ஸ்டுடியோக்களை நாங்கள் நேரில் போய்  பார்த்து, அதற்கு இணையாக நாங்கள்  ஜி – ஸ்டுடியோஸை எழுப்பி இருக்கிறோம்.”  என்றார்.

‘ஜி – ஸ்டுடியோ’ பற்றி கமல் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பாராட்டித்தள்ளினாலும், அது அமைந்துள்ள இடம் மிகப்பெரிய மைனஸ் என்பதே உண்மை.

திரையுலகும் இயங்கும் வடபழனி ஏரியாவிலிருந்து வேலப்பன் சாவடிக்கு செல்வதற்குள் களைத்துப்போய்விடுவார்கள். தவிர தற்போதைய போக்குவரத்து நெரிசலில் வேலப்பன் சாவடிக்கு திரையுலகினர் செல்வதெல்லாம் சாத்தியமே இல்லை. கமல்ஹாசனே செல்லமாட்டார்.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
08 – ஊருக்கு ஊர் பரங்கிமலை ஜோதி தியேட்டர்கள்

Close