மூட நம்பிக்கையை தகர்க்கும் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’

1144

‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘செம போத ஆகாத’, ‘ஒத்தைக்கு ஒத்த’ என நான்கு படங்களில் நடித்து வருகிறார் அதர்வா.

இவற்றில் அடுத்து ரிலீசாகவிருப்பது ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படம்தான்.

ஓடம் இளவரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் அதர்வாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்ட்ரா, பிரணிதா, அதிதி என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சூரியும் நடித்திருக்கிறார்.

டி.இமான் இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டுவிழா வருகிற 23 -ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக இசைவெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

தமிழக அரசுக்கு சொந்தமான கலைவாணர் அரங்கம் சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் கட்டப்பட்ட கலைவாணர் அரங்கம் புதிய பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது

கலைவாணர் அரங்கம் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சம்பிரதாயமாக திறக்கப்பட்டாலும் அங்கே இதுவரை எந்தவொரு விழாவும் நடைபெறவில்லை.

முக்கியமாக திரைப்பட விழாக்களை அங்கே நடத்தவே திரையுலகினர் அஞ்சுவார்கள்.

காரணம்… மூட நம்பிக்கை.

கலைவாணர் அரங்கத்தில் இசைவெளியீடு நடத்தப்பட்ட ஒரு சில படங்கள் வெற்றிகரமாக ஓடாமல்போனதால், அங்கே விழா நடத்தினால் படம் ஓடாது என்ற மூடநம்பிக்கை உருவாகிவிட்டது.

அதனாலோ என்னவோ, கலைவாணர் அரங்கம் திறக்கப்பட்டு பல மாதங்களாகியும் அங்கே எந்தவொரு விழாவும் நடைபெறவில்லை.

இந்நிலையில்தான் தன்னுடைய ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் இசை வெளியீட்டுவிழாவை துணிந்து அங்கே நடத்துகிறார் அம்மா க்ரியேஷன்ஸ் சிவா.

வெரிகுட்.