கௌதம் மேனனுக்கு செக் வைத்த ஃபைனான்சியர்கள் சங்கம்

8

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் குறித்த நேரத்தில் வெளியானால் உலகசாதனைதான்.

அதிர்ஷடவசமாக அப்படியொரு சாதனையை அவர் செய்யவே இல்லை.

கௌதம் மேனன் இயக்கும் படங்கள் சொன்னபடி முடிவடையாமல் வருடக்கணக்கில் முடங்கிக்கிடப்பது வாடிக்கையாகிவிட்டது.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிக்குமார், ராணா ஆகியோர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் தொடங்ப்பட்ட ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் இதற்கு விதிவில்க்கில்லை.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மக்கள் அந்தப்பாடல்களை மறந்தேபோய் விட்டநிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு உட்பட பல பணிகள் முடங்கிக்கிடந்தன.

இப்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து தணிக்கைக்கும் சென்றுவிட்டது.

தணிக்கைக் குழுவினர் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு U/A சான்றிதழ் வழங்கினார்கள்.

அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகள் தொடங்கிவிட்டன.

வருடக்கணக்கில் முடங்கிக்கிடந்த இந்தப்படம் தற்போது திடீரென வேகம் எடுத்தது ஏன்?

திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில் அண்மையில் தொடங்கப்பட்ட பைனான்சியர்கள் சங்கம் இனிமேல் கௌதம் மேனன் இயக்கும் படங்களுக்கு பைனான்ஸ் செய்ய மாட்டோம் என்று அறிவித்தது. இதனால் அடுத்து விஷாலை வைத்து இயக்க உள்ள புதிய படத்தை கௌதம் மேனனால் தொடங்க முடியவில்லை.

அதனால்தான் அவசரஅவசரமாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை முடித்துக்கொடுத்தாராம் மேனன்.

சாமி வரம் கொடத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையாக கௌதம் மேனன் படத்தை முடித்துவிட்டாலும் தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியைக் கொடுத்தால்தான் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வெளியிட அனுமதி கொடுப்பேன் என்கிறாராம் தனுஷ்.