சிவகார்த்திகேயனை நக்கலடித்த கௌதம் மேனன்… பின்னணி காரணம் என்ன?

860

சிம்பு நடித்த படங்கள் திட்டமிட்டபடி முடிவடையாது, குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்பதைப்போலவே கௌதம் மேனன் இயக்கும் படமும் திட்டமிட்டபடி முடிவடையாது.

சொன்ன தேதியில் திரைக்கு வராது.

இப்படிப்பட்ட ராசிக்காரர்களான கௌதம் மேனனும் சிம்புவும் ஒரு படத்தில் இணைந்தால் என்னாகும்?

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் துவங்கப்பட்டபோதே இந்த ப்ராஜக்ட் வௌங்காது என்று சொன்னவர்கள்தான் அதிகம்.

அவர்களின் வாய்க்கு சர்க்கரையைப் போட வேண்டும் என்று சொல்லுமளவுக்கு சிம்புவும் மேனனும் இணைந்த அச்சம் என்பது மடமையடா படம் வருடக்கணக்கில் முடங்கிக் கிடந்தது.

பல்வேறு பிரச்சனைகள… பல பஞ்சாயத்துகள்.

ஒவ்வொரு பிரச்சனைகளையும் கடந்து ‘அச்சம் என்பது மடமையடா’ படம் நாளை (11-11-16) ரிலீசாகவிருக்கிறது.

கௌதம் மேனனுக்கு கடன் கொடுத்த பல பேர் அவர் மீது வழக்கு தொடரவும், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்கு தடை வாங்கவும் தயாராக இருக்கிறார்கள்.

எனவே, அப்பன் பேர் தெரியாத பிள்ளையைப் போல் தயாரிப்பாளர் பெயர் இல்லாமலே  ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், அச்சம் என்பது மடமையடா படம் சம்பந்தமாக நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இயக்குநர் கௌதம் மேனன்.

‘‘அச்சம் என்பது மடமையடா படம் துவங்கி  இரண்டு வருடங்களுக்கு மேலாகிறதே. இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம்?’’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

‘‘உண்மையிலேயே இந்த படம் இவ்வளவு காலதாமதமானதற்கு என்ன காரணம் என்று உங்களை போல எனக்கும் தெரியாது. ஏதேதோ காரணங்களால் லேட் ஆயிடுச்சு!” என்று மக்களையும் மீயடியாக்களையும் முட்டாளாக்குவதுபோல் பதில் சொன்ன கௌதம் மேனன் அடுத்து சொன்னதுதான் அதிகப்பிரசங்கித்தனத்தின் உச்சம்.

“இதற்கு நான் சிவகார்த்திகேயன் மாதிரி இங்கு மேடையில் அழ முடியாது!” என்று சம்மந்தமே இல்லாமல் சிவகார்த்திகேயனை வம்புக்கு இழுத்தார்.

தொடர்ந்து, “நான் இது வரை இயக்கிய ஹீரோக்களில் எந்த டார்ச்சரும் தாராத ஹீரோ சிம்புதான்! சிம்புவிடம் கதையின் சில லைன்கள் சொன்னால் போதும்! செய்யலாம் என்பார்! ஆனால் மற்ற ஹீரோக்கள் அப்படி இல்லை! முழு கதையும் வேண்டும் என்று டார்ச்சர் கொடுப்பார்கள்!’’ என்று போகிற போக்கில் சூர்யாவையும் போட்டுத்தாக்கினார் கௌதம் மேனன்.

அது சரி.. சிவகார்த்திகேயன் மீது கௌதம் மேனனுக்கு என்ன கடுப்பு?

சிவகார்த்திகேயன் தரப்பில் விசாரித்தோம்…

யுடியூபில் ஒரு பக்கத்தைத் தொடங்கியுள்ள கௌதம் மேனன் சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். அப்படி தனுஷை பேட்டி எடுக்கச் சென்றபோதுதான் அவருடைய மண்டையைக் கழுவி எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்க கால்ஷீட் வாங்கினார்.

அதைப் போலவே சிவகார்த்திகேயனை பேட்டி எடுக்க கௌதம் மேனன் அணுகி இருக்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன் தரப்பில் பதில் இல்லை. கௌதம் மேனன் அனுப்பிய குறுஞ்சய்திகளுக்கும் பதில் கொடுக்கவில்லை.

பல கோடி கடனில் இருக்கும் கௌதம் மேனனுக்கு படம் பண்ணினால் இன்னொரு ரஜினி முருகன் அனுபவத்தை சந்திக்க நேரும் என்பதால் கௌதம் மேனனை தவிர்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அந்த கடுப்பில்தான் பொதுமேடையில் போட்டுத்தாக்கி இருக்கிறார் மேனன்.