ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவிய நடிகை

61

LIFE AGAIN INDIA நிறுவனத்தின் நிறுவனர் கௌதமி சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் ஏழை – எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்ய சென்றிருந்தார்.

வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்வதே அவர் தனது சாதனையாக கருதுகிறார்.

திருவண்ணாமலையில் உள்ள பள்ளி கல்வியாளர்களிடம் நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால கல்வி பற்றி கலந்துரையாடி உள்ளார்.

மேலும் அவர் திருவண்ணாமலையில் கல்வி மையம் ஒன்றை நிறுவி ஏழை குழந்தைகளுக்கு கணக்கு மற்றும் ஆங்கில பாடங்களை ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க உள்ளார்.

நம் நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் வருங்கால கல்விக்காக உதவி செய்ய அவர் காத்திருக்கிறார்.