கேம் ஓவர் வருகிற 14-ஆம் தேதி மூம்மொழிகளில் ரிலீஸ்

90

நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் அந்த படத்தை தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா கேபி ஆகியோர் நடிப்பில் இயக்கிய படம் ‘இரவாக்காலம்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தும் ஏனோ இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அஸ்வின் சரவணன் தனது மூன்றாவது படமாக இயக்கியுள்ள படம் ‘கேம் ஓவர்’.

இந்த படத்தை ‘விக்ரம் வேதா’ உட்பட பல படங்களை தயாரித்துள்ள ‘ஒய் நாட் ஸ்டூடியோ’ நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் டாப்ஸி கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் சொல்கின்றனர்.

அதோடு ஹிந்தி மொழியிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வருகிற 14-ஆம் தேதி ரிலீசாகிறது.

இப்படத்தில் டாப்ஸி படம் முழுக்க வீல்சேரில்தான் அமர்ந்தபடியே நடித்துள்ளாராம்.

இயக்குனர் அஸ்வின் சரவணன் சொல்வதை வைத்துப் பார்த்தால் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் ரியர் விண்டோ படத்தின் சாயலில் கேம் ஓவர் படம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.