வேண்டாம் ஜி.வி. பிரகாஷ்குமார்…. இயக்குநர் ஏ.எல்.விஜய் எடுத்த அதிரடி முடிவு….

585

கிரீடம் படம் தொடங்கி இது என்ன மாயம் வரை ஏ.எல்.விஜய் இயக்கிய அத்தனை படங்களுக்கும்  ஜி.வி. பிரகாஷ்குமார்தான் இசையமைப்பாளர்.

விஜய்யை வைத்து தலைவா படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, வேறு ஒரு பெரிய இசையமைப்பாளரைத்தான் தயாரிப்பாளர் சிபாரிசு செய்தார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய்யோ ஜி.வி.பிரகாஷ்குமாரை விட்டுக் கொடுக்காமல் எனக்கு ஜி.வி.தான் வேண்டும் உறுதியாக இருந்து தலைவா படத்துக்கு அவரை இசையமைப்பாளராக்கினார்.

அந்தளவுக்கு ஏ.எல். விஜய்யின் ஆஸ்தான் இசையமைப்பாளராக இருந்தார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

அதே ஜி.வி.பிரகாஷ்குமார் இப்போது ஏ.எல். விஜய்க்கு கசந்துபோய்விட்டதுதான் அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்யம்..

ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் இயக்குநர் ஏ.எல். விஜய்.

இயக்குநர் ஏ.எல். விஜய் – ஜெயம் ரவி இருவரும் இணைய உள்ள படத்துக்கு இசையமைக்கவிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார் இல்லை, ஹாரிஸ் ஜெயராஜ்.

ஏ.எல்.விஜய்யின் முதல் படமான கிரீடம் படம் தொடங்கி அவர் கடைசியாக இயக்கிய இது என்ன மாயம் வரை எட்டு படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் இசையமைத்தார்.

இந்த எட்டு படங்களில்…. தலைவா உட்பட பல படங்கள் மொக்கப்படங்கள்.

ஆனாலும் ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசை சிறப்பாகவே இருந்திருக்கிறது.

அப்படி இருந்தும் தற்போது இயக்க உள்ள புதிய படத்திலிருந்து ஜி.வி. பிரகாஷ்குமாரை ஏ.எல்.விஜய் கழற்றிவிட்டது ஏன்?

ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் பிசியாகிவிட்டார். அதனால் அவர் கீபோர்டை தொடுவதே இல்லை.

மியூசிக் பண்ணுவதிலும் அவருக்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் வேறு வழியில்லாமல் ஹாரிஸ் ஜெயராஜை தேடிப்போனார் என்று ஏ.எல். விஜய் தரப்பு சொல்கிறது.

ஜி.வி. பிரகாஷ்குமார் வட்டாரத்தில் விசாரித்தால் வேறுவகையான தகவல் வந்து விழுகிறது.

தலைவா படம் உட்பட ஜி.வி. பிரகாஷ்குமார் காம்பினேஷனில் ஒரு படமும் ஹிட்டாகவில்லை என்ற வருத்தம் ஏ.எல்.விஜய்க்கு இருந்திருக்கிறது.  இப்போது அவருக்கு உடனடியாய் ஒரு சக்சஸ் தேவை. எனவேதான் ஜி.வி.யை கழற்றிவிட்டார் என்று குற்றம்சாட்டும் குரலில் சொல்கிறார்கள்.

மொத்தத்தில் எட்டு படங்களைக் கொடுத்த ஒரு கூட்டணி பிரிந்துவிட்டது.