சிம்ஃபோனி இசைக்காக ஜெர்மனிக்கு செல்லும் ஜி வி பிரகாஷ்குமார்

761

இளம் இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார், இசை, நடிப்பு, படத்தயாரிப்பு என பல்வேறு துறைகளில் பிராகசித்துக் கொண்டு இருக்கிறார்.

நடிப்புத்துறையில் அவர் சிரத்தையுடன் மேற்கொள்ளும் முயற்சிகள் தன்னை தேர்ந்த நடிகராக கரை சேர்க்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

நடிபிப்பில் அவர் கவனம் செலுத்தி வருவதால் இனிமேல் இசையமைப்பில் கவனம் செலுத்த மாட்டார் என திரைத்துறையில் அண்மைக்காலமாக ஒரு பேச்சு நிலவுகிறது.

அவற்றை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற உள்ளது.

என்ன சம்பவம்?

சொல்லுங்க…ஜி வி பிரகாஷ்…

“சிம்ஃபோனி இசைக்காக ஜெர்மனி செல்ல இருக்கிறேன்” என்கிறார் அடக்கமாக.

அப்படியா?

“யெஸ்.. சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஒரு நுகர் பொருளின் விளம்பரத்துக்காக நான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளேன்.

உலக அரங்கில் சோபிக்கும் சில இசை அமைப்பாளர்களுடன் என்னை ஒப்பிட்டு , எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி.

ஜெர்மனியில் உள்ள Stuttgart என்னும் நகரத்தில் மேற்கொள்ள இருக்கும் இசைப் பதிவுக்காக நான் விரைவில் செல்ல உள்ளேன்.

இசை உலகில் பிரசித்தி பெற்ற பெயர்கள் பல ஜெர்மனியில் தோன்றி உள்ளது.

இதில் மிக முதன்மையானவர் எனக் கருதப்படும் கோன்ராத் பௌமன் அவர்களின் இசை காற்றில் மிதக்கும் ஜெர்மனி நாட்டில் என்னுடைய இசையும் கலக்கும் என்பதே எனக்கு பெருமை ‘

என்கிறார் ஜி வி பிரகாஷ்குமார்.

வாழ்த்துக்கள்…