சர்கார் 32 கோடி… விஸ்வாசம் 16 கோடி… முறியடிக்க முடியாத சர்கார் வசூல் சாதனை Comments Off on சர்கார் 32 கோடி… விஸ்வாசம் 16 கோடி… முறியடிக்க முடியாத சர்கார் வசூல் சாதனை

கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம்தான் 2018 ஆம் ஆண்டில் தமிழக அளவில் அதிகபட்சமான வசூலைக்குவித்த படமாக இருக்கிறது. ரஜினி நடித்த 2.0 படத்தின் வசூல் சர்கார் வசூலைவிட 5 கோடி அதிகம் என்றாலும் அதில் 3டி கண்ணாடிக்காக வசூலிக்கப்பட்ட தொகையும் அடக்கம்.

தியேட்டரில் வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை மட்டும் வைத்து கணக்கிட்டால் சர்கார் படத்தின் வசூல்தான் சாதனையாக உள்ளது.

இந்நிலையில் ரஜினி நடித்த பேட்ட படமும், விஜய்யின் போட்டியாளராக சித்தரிக்கப்படும் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியாகின.

படம் வெளியான அன்றைய தினமே பேட்ட படமும் விஸ்வாசம் படமும் சர்கார் படத்தின் முதல்நாள் வசூலை தாண்டிவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் வெளியாகத்தொடங்கின.

குறிப்பாக அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் வசூல் என்ற பெயரில் சகட்டுமேனிக்கு தகவல்களை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

உண்மை நிலவரம் வேறு.

தமிழ்நாட்டில் சர்கார் படத்தின் முதல்நாள் வசூலை விஸ்வாசம் படம் மட்டுமல்ல பேட்ட படமும் கூட நெருங்கவில்லை.

சர்கார் படம் 700க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானதால் முதல்நாள் அன்று 32 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையை படைத்தது.

ஆனால் பொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்களோ சுமார் 450 தியேட்டர்களில்தான் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக இப்படங்களின் வசூல் உச்சத்தை எட்டவில்லை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வசூல் விவரங்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.

தமிழகத்தில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல்…

சென்னை – 2.37 கோடி
செங்கல்பட்டு- 7.30 கோடி
வட ஆற்காடு – 2.20 கோடி
தென் ஆற்காடு – 2.00 கோடி
சேலம் – 3.70 கோடி
கோவை – 4.90 கோடி
திருச்சி, தஞ்சை – 3.75 கோடி
மதுரை, ராமநாதபுரம் – 4.40 கோடி
திருநெல்வேலி – 1.60 கோடி
மொத்தம் – 32.22 கோடி

தமிழகத்தில் விஸ்வாசம் படத்தின் முதல் நாள் வசூல்…

சென்னை – 0.88 கோடி
செங்கல்பட்டு- 3.72 கோடி
வட ஆற்காடு – 1.10 கோடி
தென் ஆற்காடு – 1.10 கோடி
சேலம் – 1.70 கோடி
கோவை – 2.83 கோடி
திருச்சி, தஞ்சை – 1.30 கோடி
மதுரை, ராமநாதபுரம் – 3.10 கோடி
திருநெல்வேலி – 0.88 கோடி
மொத்தம் – 16.61 கோடி

இந்த தகவல்களின் அடிப்படையில் சொல்வதென்றால், சர்கார் படம் தமிழகத்தில் முதல்நாள் வசூல் செய்த தொகையில் பாதியைத்தான் விஸ்வாசம் படத்தால் வசூல் செய்ய முடிந்திருக்கிறது.

விஜய்க்கு போட்டியாளராக அஜித்தை ரசிகர்கள் முன்னிறுத்தினாலும் வசூல் அடிப்படையில் விஜய்யைவிட பல மடங்கு அஜித் பின்தங்கியிருக்கிறார் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
இளையராஜா இசையில் பாடும் கல்லூரி மாணவிகள்

Close