ஜூன் 15ல் வெளியாகும் ‘என்னோடு நீ இருந்தால்’ Comments Off on ஜூன் 15ல் வெளியாகும் ‘என்னோடு நீ இருந்தால்’

சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படம் ‘என்னோடு நீ இருந்தால்’.

இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக மானசா நாயர் நடிக்கிறார்.

மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – நாகசரவணன்

இசை – கே.கே

எடிட்டிங் – ராஜ்கீர்த்தி

கலை – எஸ்.சுப்பிரமணி

நடனம் – கேசவன்

ஸ்டன்ட் – ஸ்டன்ட் ஜி

தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.ஆனந்த்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் – மு.ரா.சத்யா

தயாரிப்பு – எஸ்.யசோதா

படத்தின் இயக்குனர் மு.ரா.சத்யாவிடம் படம் பற்றி கேட்ட போது..

லவ் மற்றும் ரொமாண்டிக் திரில்லராக படம் உருவாகி உள்ளது .

யாரிடமும் உதவியாளராக பணி புரியவில்லை, படங்களை பார்த்தது, புத்தகங்கள் எழுதும் அனுபவத்தை வைத்தே இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.

இந்த படம் வெளிவந்த பிறகு பார்த்த அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இந்த சமூதாயத்தால் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்கு தெரியாமலே பாதிக்கப்பட்டு வருகிறோம்.

அந்த பாதிப்பு என்ன ? ஏன் அவ்வாறு நடக்கிறது என்பது இந்த படம் பார்த்த பிறகு அதை உணர்த்து அதிர்சியடையும் வண்ணம் படத்தின் திரைக்கதை இருக்கும்.

படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதாமாக ரசிக்கவைக்கும்.

சென்சாரில் படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது மகிழ்ச்சி படம் ஜூன் 15ஆம் தேதி வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் மு.ரா.சத்யா.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
காலா படம் ரஜினி ரசிகர்களை கடன்காரர்களாக்குகிறதா….?

Close