நடித்து சம்பாதிக்கும் பணத்தைவிட படுத்து சம்பாதிக்கும் பணம்தான் அதிகம் – என் போன்ற நடிகைகளுக்கு!

2189

நடித்து சம்பாதிக்கும் பணத்தைவிட படுத்து சம்பாதிக்கும் பணம்தான் அதிகம் – என் போன்ற நடிகைகளுக்கு!

‘என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 8

காலையிலிருந்து என் வீட்டு போன் ஓயவே இல்லை. செல்போனும்தான். எரிச்சலில் செல்போனை ஆஃப் பண்ணிவிட்டேன்.

எல்லாம் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்! நன்றி சொல்லி எனக்கு அலுத்துப் போய் விட்டது. ஏகப்பட்ட பொக்கேக்கள் வீட்டில் குவிந்து விட்டன.

இன்று அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருது பட்டியலில் என் பெயர் இருந்ததுதான் இத்தனைக்கும் காரணம். திரைப்படத் துறையில் கலைச்சேவை செய்ததற்காக எனக்கு கலைமாமணி விருதாம்.

கலைச்சேவை! வெளியே சொன்னால் வெட்கக்கேடு! நான் செய்தது கலைச் சேவையா… சதைச் சேவை.

”இத்தனை சீக்கிரம் கலை மாமணி வாங்கிய நடிகை நீங்க ஒருத்தர்தான். கங்கிராஜுலேஷன்” என்று வாழ்த்துகிறார்கள் எல்லோரும்.

”இது உங்களோட திறமைக்குக் கிடைச்ச பரிசு” என்றார் ஒரு நடிகர்.

ஆமாம். அன்று பெட்ரூமில் நான் காட்டிய திறமைக்குக் கிடைத்த பரிசுதான் என்று எனக்குள் என் மனக்குரல்.

என் திறமைதான் காரணம் என்று மற்றவர்கள் வேண்டுமானால் நினைக்கலாம்.

நான் எப்படி நினைப்பேன்?

அந்த கிழட்டு அமைச்சரின் காமக்களியாட்டத்திற்கு ஈடுகொடுத்ததற்குக் கிடைத்த கூலி இது என்று எனக்குத்தானே தெரியும்?

கூலி என்று சொல்ல முடியாது.

கூலியைத்தான் அப்போதே கொடுத்துவிட்டாரே!

இரண்டு ஐநூறு ரூபாய் கட்டுக்கள்.

இந்த கலைமாமணி பட்டம் போனஸ்!

அன்று அந்த மோசமான இரவில்….

விடியவிடிய அவர் அடித்த கொட்டம் இருக்கிறதே…

நினைத்தாலே குமட்டுகிறது எனக்கு.

உவ்வே…!

குடித்தால்தான் அவருக்கு ‘மூடு’ வருமாம்.

கிழட்டு முண்டத்துக்கு அப்படி ஒரு நினைப்பு.

ஒன்றுக்கும் உதவாத ஜடம்.

அது ப்யூஸ் போன பல்பு என்று எனக்குத்தானே தெரியும்?

”நீயும் குடி” என்று என்னையும் வற்புறுத்தினார்.

மறுத்தேன்.

”பழக்கிக்கணும் நிலாக்குட்டி. சும்மா குடி. ஒரு பெக் அடிச்சா கும்முன்னு பறக்கிற மாதிரி இருக்கும்.”

கடைசியில் அந்த கண்றாவியை என் வாயில் ஊற்றி விட்டார்.

வயிற்றுக்குள் திராவகமாய் எரிந்தது அந்த சனியன்.

அது மட்டுமா?

வாயால் சொல்ல முடியாத காரியத்தை எல்லாம் என்னை செய்ய வைத்தார்.

வாந்தி வருவது போல் குமட்டியது எனக்கு.

நான் உள்ளுக்குள் மௌனமாக அழுது கொண்டிருந்தேன்.

அந்த கிழட்டுப் பன்னியோ குஷியில் ஆட்டம் போட்டது.

கடவுளே, இனி இப்படிப்பட்ட கொடுமையான அனுபவம் எனக்கு வரவே கூடாது என்று என்இஷ்ட தெய்வமான ‘பெரிய கருப்பனை’ மனதில் வேண்டிக்கொண்டேன்.

வந்தது… அடிக்கடி வந்தது… மாதம் ஒரு முறையேனும்…

நடிகைகளுக்கு இப்படி ஒரு இம்சையான இன்னொரு பக்கம் இருக்கும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.

சான்ஸுக்காக மட்டும்தான்  ஹீரோக்களிடம் அவ்வப்போது படுக்க வேண்டும்  என்று நினைத்திருந்தேன். அதற்கு பணம் தர மாட்டார்கள் என்றும், ஓசியில் உடம்பு சுகத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் சக நடிகைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அந்த விஷயத்தையே    என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

சரி. அறிமுக நிலையில் மட்டும் தானே இந்தத் தொல்லை எல்லாம்?

அதன்பிறகு பெரிய ஸ்டாராகி விட்டால், இம்மாதிரியான பிரச்சினைகள் இருக்காது.

நிம்மதியாக இருக்கலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன்.

பிரபல நடிகையான பிறகுதான் இந்தத் தொழில் சூடு பிடிக்கிறது என்று தெரிந்தபோது நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

ஆமாம், பணத்துக்காகப் பலரிடம் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை சீக்கிரமே வந்தது.

உண்மையைச் சொல்லப்போனால், என்னைப் போன்ற நடிகைகளுக்கு இதுதான் பிரதான தொழில்.

சினிமாவில் நடிப்பது பார்ட் டைம்தான்.

நடிகை என்பது இந்தத் தொழிலுக்குப் பயன்படும் லேபிள். விசிட்டிங் கார்ட்- மூலதனம்.

இதை வைத்துத்தான் ரேட் நிர்ணயிக்கிறார்கள்.

நடித்து சம்பாதிக்கும் பணத்தைவிட படுத்து சம்பாதிக்கும் பணம்தான் அதிகம் – என் போன்ற நடிகைகளுக்கு!

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்