சான்ஸ் தருகிற திமிரில் அந்த டைரக்டர்தான் நினைத்த நேரத்தில் ஆசையை தீர்த்துக் கொள்கிறார் என்றால், அவரது மகனுக்கும் முந்தானை விரிக்க வேண்டுமா?… ‘என் கதை’ – 6

2264

சான்ஸ் தருகிற திமிரில் அந்த டைரக்டர்தான் நினைத்த நேரத்தில் ஆசையை தீர்த்துக் கொள்கிறார் என்றால், அவரது மகனுக்கும் முந்தானை விரிக்க வேண்டுமா?

‘என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 6

அங்கே நடந்ததை சொல்லவே நா கூசுகிறது. அந்த குட்டிப் பிசாசு என்னைக் குதறி விட்டான்.

அவனிடமிருந்து தப்பிக்க நான் எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

அவன் நினைத்தை சாதித்துவிட்டுத்தான் போனான்.

அதன்பிறகு எனக்கு தூக்கமில்லை.

சான்ஸ் தருகிற திமிரில் அந்த டைரக்டர்தான் நினைத்த நேரத்தில் ஆசையை தீர்த்துக் கொள்கிறார் என்றால், அவரது மகனுக்கும் முந்தானை விரிக்க வேண்டுமா?

என்ன கொடுமை இது?

நினைத்த நேரத்தில் சூட்டைத் தணிக்க நான் என்ன அவர்களின் அடிமையா?

நல்லவேளை! இந்த டைரக்டருக்கு ஒரே ஒரு மகன் தான்.

இல்லை என்றால் என் கதி என்னாகியிருக்கும்?

யோசிக்கவே பகீரென்கிறது.

இப்படி ஒரு நரகத்தில் என்னை தள்ளிவிட்டாளே அம்மா.

ஆமாம், அம்மாவை இன்னும் காணோமே? எங்கே தொலைந்தாள்?

அவளும் இந்த சதிக்கு உடந்தை என்று விடிந்ததும்தான் தெரிந்தது.

அவனுக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அவள் என்னை ரூமில் தனியாக விட்டுவிட்டுப் போயிருக்கிறாள்.

”டைரக்டர் ஊரில் இல்லாத நேரமா அவனை உன் கையில் போட்டுக்குற வழியைப் பாரு.

அவரோட அடுத்த படத்துல அந்த பையன்தான் ஹீரோவாம்.

பெரிய ஆளாயிட்டா அவன் மூலமா படம் வரும். நல்ல சான்ஸை கெடுத்துக்காதே…”

த்தூ… நீயெல்லாம் ஒரு அம்மாவா என்று காரித் துப்ப வேண்டும் போல் எனக்குள் ஆவேசம்.

கையில் அகப்பட்டதை எடுத்து அவள் மண்டையை உடைக்க வேண்டும்போல் ஆத்திரம்.

பெத்தவளாச்சே… அடக்கிக் கொண்டேன்.

என்னிடம் இப்படி சொன்னவள் அவனிடம் என்ன சொன்னாளோ…

தினமும் ராத்திரியானால் என் ரூமுக்கு வந்துவிடுவான். வாசலில் அவன் தலை தெரியும்போதே எனக்கு குமட்டும்.

குடிகார குட்டிப் பிசாசு.

”என்ன ஆன்ட்டி… ரூமிலேயே அடைஞ்சு கிடக்கிறீங்களே… போரடிக்கலையா உங்களுக்கு-”

அவனது குரலும்… முகமும்… சிரிப்பும்… அப்படியே டைரக்டர்தான். டைரக்டரின் நகல்!

”ஆமா தம்பி. ஒரே போர். இந்த ஊருல பாக்குறதுக்கு என்ன இருக்கு சொல்லுங்க?”

”பழனி சீட்டுக் கச்சேரியை ஆரம்பிச்சுட்டான். போயி ஒரு கை போடுறதுதானே.”

சீட்டாட்டத்தில் கரை கண்டவள் அம்மா. இதுதான் சாக்கு என்று கிளம்பிவிடுவாள்.

அவள் நகர்ந்த மறுகணமே இவனது கச்சேரி ஆரம்பமாகும். இந்த விஷயத்தில் அப்பா எட்டடி பாய்ந்தால் புள்ளை பதினாறடி பாய்பவன்.

டைரக்டர் ஊரிலிருந்து வந்ததும் யார் வத்தி வைத்தார்கள் என்று தெரியவில்லை.

அவரது மகன் தினமும் என் ரூமுக்கு வந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்டு விட்டார்.

”நான் இல்லாத நேரத்துல நல்லா தேறிட்ட போலருக்கு…” என்றார் விஷமமாகச் சிரித்தபடி. தேறிட்ட என்பதற்கு அனாவசியமாய் ஒரு அழுத்தமும் கொடுத்தார்.

”டான்ஸ் மாஸ்டர் சொன்னார். பிரம்மாதமா மூவ்மெண்ட் கொடுத்தியாம் வெரிகுட்” என்று உடனே பேச்சை மாற்றினார். ஆனாலும் அவரது பார்வையில் தெரிந்த அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

உன் மகன் உன்னைவிட பொறுக்கியா இருக்கானே என்று அந்த ஆள் மூஞ்சிக்கு நேராய் கேட்டுவிட ஆசைதான். முடியுமா என்ன?

லஞ்ச் பிரேக்கில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அருகில் யாருமில்லை.

”என்னம்மா நிலா… சாப்பிடுறியா சாப்பிடு?” என்று அருகில் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார் டைரக்டர்.

அவர் என் அருகில் வந்தால் ஒருத்தரும் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். தப்பித்தவறி யாரும் வந்தால்கூட சற்று தூரத்தில் நிற்கும் பழனி அவர்களை மடக்கி விடுவான்.

”டைரக்டர் நிலாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்காரு. போனால் டென்ஷனாகிடுவாரு…”

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எல்லாம் டைரக்டருக்கு மூடு வந்துவிடும். என் அங்கங்களை கவிதையாக வர்ணிக்க ஆரம்பித்துவிடுவார்.

அவரது வர்ணனை ஆபாசத்தின் உச்சம். அல்லது முந்தைய ராத்திரியில் நடந்ததை ஞாபகப்படுத்தி ஏதாவது அசிங்கமாகப் பேசுவார்.

இப்போது அப்படி ஏதோ சொல்லப் போகிறார் என்றுதான் நினைத்தேன்.

”இந்தப் படத்தை முடிச்சிட்டு என் பையனை ஹீரோவா வச்சுத்தான் அடுத்த படம் பண்ணப் போறேன். பெரிய பட்ஜெட்…’

அவர் சொல்வதை சுவாரஸ்யமாகக் கேட்பதுபோல் பாவனை செய்தேன்.

”பண்ணப் போறது லவ் சப்ஜெக்ட். இவனுக்கு லவ் சீன்ல எப்படி நடிக்க வரும்னு தெரியலை. ஹீரோயினோடு நெருங்கி நடிக்க கூச்சப்பட்டான்னா படம் தேறாது” என்றவர் சின்ன இடை வெளிவிட்டுச் சொன்னார்.

”அவன் கூச்சத்தை நீதான் போக்கணும். எல்லாத்தையும் கத்துக் கொடுத்துடு. அப்பத்தான் பையன் தேறுவான். லவ் சீன்ல அவன் புகுந்து விடையாடணும். அது உன் கையிலதான் இருக்கு. என்ன புரியுதா?”

எல்லாத்தையும் கத்துக் கொடுத்துடு என்பதை அழுத்திச் சொன்னார்.

அடப்பாவி! நீயெல்லாம் ஒரு தகப்பனா? தறிகெட்டு அலையும் தறுதலையான மகனைக் கண்டித்து வளர்க்காமல் அவனுக்கு படுக்கையறைப் பாடம் எடுக்கச் சொல்றியா? உன் மகன் சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்பதற்காக நான்… அவனுக்கு தீனியாகணுமா?

கடவுளே! இதெல்லாம் உன் காதில் விழுகிறதா? இவர்களின் ஆசையில் நீ மண்ணைப் போட வேண்டும். அந்தக் குட்டிப் பிசாசு நடிக்கும் படம் ஓடக் கூடாது. ஓடினால் ஆபத்து. எனக்கு மட்டுமல்ல, இந்த உலகத்தில் ஒரு பெண்ணையும் விட்டு வைக்கமாட்டான் அந்த பொறுக்கி நாய்.

பெரிய டைரக்டரின் மகன் என்ற திமிரிலேயே இப்படி ஆட்டம் போடும் அவன் நாளை பெரிய ஹீரோவாகி விட்டால்? கடவுளே! அவன் கொட்டத்தை அடக்கு. நான் வேண்டாத தெய்வம் இல்லை.

என் சாபமும் பிரார்த்தனையும் பலித்தது. அவனை வைத்து அவன் அப்பா எடுத்த அந்தப் படம் ஒருவாரம் கூட ஓடவில்லை.

தேங்க் காட்!

நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்