நமக்கென்று ஹீரோ அந்தஸ்து வரட்டும் என்று தன் காம வக்ரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தானோ?
‘என் கதை’
ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…
அத்தியாயம் – 18
என்னுடைய அனுபவத்தில் சினிமாவில் எல்லா ஆண்களுமே ஒன்றுதான்.
குறிப்பாக ஹீரோக்கள்.
ஒவ்வொருவருக்கும் மூஞ்சிதான் வேறு.
அவர்களின் செயல்களில் எந்த மாற்றமும் இல்லை.
என் போன்ற கதாநாயகிகளைக் கட்டிலில் சாய்க்க அவர்கள் போடும் வேஷம், செய்யும் காரியங்கள், பேசும் பேச்சுகள்…
ச்சே… சதைவெறி பிடித்த சண்டாளர்கள். கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் எப்படித்தான் இப்படி எல்லாம் பொய் பேசுகிறார்களோ… பித்தலாட்டக்காரன்கள்.
எனக்காக உருகுவதாகவும், இருபத்தி நாலு மணி நேரமும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பதாகவும் கூச்சமில்லாமல் பொய் சொல்கிறார்கள்.
இதே டயலாக்கைத்தானே மற்ற நடிகைகளிடமும் சொல்வார்கள்?
அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம் எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது- அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது-கேவலம் இந்த உடம்புக்காக என்னவெல்லாம் புளுகுகிறார்கள்.
அவர்களுக்கும் பொண்டாட்டி உண்டு.
அவர்களிடம் இல்லாததா என்னிடம் இருக்கிறது?
தவிர, இவர்கள் எத்தனை பெண்களைப் பார்த்திருப்பார்கள்?
என் போன்ற நடிகைகள், குரூப் டான்ஸர்கள், துணை நடிகைகள் என்று கண்ணில் படும் ஒரு பெண்ணையும் விட்டு வைப்பதில்லை.
ரசிகை என்று தேடி வரும் கல்லூரி மாணவிகளையும் கட்டிலுக்குக் கூட்டிப் போகிறார்கள் பல சமயங்களில்.
அப்படியும் இவர்களின் சதைவெறி குறையவில்லையே?
டிரஸ்ஸை அவிழ்த்துப் போட்டால் எல்லா பெண்களும் ஒன்றுதான். அதே சதை… அதே மாரு… அதே மயிரு.
அப்புறமும் என்னத்துக்கு இந்த உடம்புக்கு நாய் மாதிரி அலைகிறார்கள்?
இதற்கு இந்த இளம் ஹீரோவும் விதிவிலக்கில்லை. என்னைப் பொறுத்தவரை இவனும் நாய்தான். என்னைக் குதறிய நாய்.
வேதா படத்தில் அவனுடன் சேர்ந்து நடித்தபோது பரம சாதுவாய் இருந்தான்.
நானே போய் வலிய பேசினாலும் பேச மாட்டான்.
ஹாய் என்பதோடு சரி. எழுந்து போய்விடுவான்.
என்னிடம் மட்டுமில்லை. எல்லா பெண்களிடமும் இப்படித்தான் விலகியே இருந்தான். அப்படி இருந்தவன் இப்போது ரொம்பத்தான் மாறிவிட்டான்.
அவன்தானா இவன்? என்னால் முதலில் நம்பவே முடியவில்லை.
சினிமா உலகம் இவனை மாற்றிவிட்டதா?
ஆரம்பத்திலிருந்தே இவன் இப்படித்தானா?
இதற்கு முன் நானும் அவனும் சேர்ந்து நடித்த படத்துக்கு அவனுடைய அப்பாதான் டைரக்டர்.
அதனால்தான் அப்போது வாலை சுருட்டிக் கொண்டிருந்தானோ?
அல்லது நமக்கென்று ஹீரோ அந்தஸ்து வரட்டும் என்று தன் காம வக்ரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தானோ?
இப்போது அவனுக்கு ஸ்டார் வேல்யூ வந்துவிட்டது.
படுக்கைக்குக் கூப்பிட்டால் யார் வேண்டுமானாலும் வருவார்கள் என்ற தைரியமும், திமிரும் வந்திருக்கலாம்.
என்ன இழவோ…. அவனது நடவடிக்கைகள் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
ஷூட்டிங் ஸ்பாட்டில் நிம்மதியாக உட்கார முடியவில்லை.
உயிரை எடுக்கிறான்.
ஷாட் முடிந்தால் நல்ல பிள்ளையாக ஒரு ஒரமாகப் போய் உட்கார்ந்து விடுவான்.
நான் ஒரு இடத்தில் இருந்தால் அவன் வேறு இடத்தில் இருப்பான்.
மற்றவர்களின் பார்வைக்கு அவன் யாரிடமோ… ஏதோ முக்கியமான விஷயம் போனில் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதுபோல் தோன்றும்.
ஆனால் அவன் பேசுவது வேறு யாரிடமோ இல்லை.
பத்தடி தூரத்தில் உட்கார்ந்திருக்கும் என்னிடம்தான்.
செல்போன் அடிக்கும்.
அவன்தான் பேசுவான்.
“நிலா என்ன பண்ணிக்கிட்டிருக்கே?”
“புக் படிச்சுக்கிட்டிருக்கேன்.”
“நான் படிக்கலாம்னுதான் பார்க்கறேன். ஆனா…”
“படிக்க வேண்டியதுதானே?”
“நான் படிக்க வேண்டிய புக் உன்கிட்ட இல்லே இருக்கு” என்று சிரிப்பான்.
இப்படித்தான் சம்பந்தமில்லாமல் ஏதாவது பேசுகிறான்.
அவன் எதற்கு அடி போடுகிறான் என்று எனக்குத் தெரியாதா என்ன?
என் உடம்பை அனுபவிக்கத்தான் இப்படி எல்லாம் அலைகிறான்.
நான் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
அவன் பேசுவது எனக்குப் புரியாதது போலவே பாவனை செய்தேன்.
இப்படி இருப்பதுதான் பாதுகாப்பு. அவனும் இதுவரை படுக்க வர்றியா என்று நேரடியாகக் கேட்கவில்லை. சுற்றி வளைத்துத்தான் கேட்கிறான்.
நேரடியாகக் கேட்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டு தைரியத்தில் இருந்தேன்.
ஒருநாள் வாய் திறந்து நேரடியாய் கேட்டே விட்டான்.
“‘நிலா, இன்னைக்கு நைட் என்கூட டின்னருக்கு வர்றியா?”
“ஸாரி… எனக்கு ஷூட்டிங் இருக்கு” என்று நாசூக்காக மறுத்தாலும் விடவில்லை அவன். தொடர்ந்து வற்புறுத்தினான்.
என் போன்ற நடிகைகள் வலைவிரிக்க நம் ஹீரோக்களின் டெக்னிக் இதுதான். முதலில் டின்னருக்கு என்றுதான் ஆரம்பிப்பார்கள். போனால் அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாதா என்ன? எத்தனை டின்னருக்குப் போய் நானே தீனியாகி இருக்கிறேன்?
“என் அடுத்த படத்தின் ஹீரோயின் நீதான். உன்னைத்தான் போடணும்னு புரட்யூஸர்கிட்ட ஸ்ட்ராங்கா ரெகமெண்ட் பண்ணியிருக்கேன்.
இந்த வருஷம் நான் பண்ணுகிற எல்லா படத்துக்கும் நீதான் ஹீரோயின்” என்றெல்லாம் பேச்சை ஆரம்பித்து குஷிப்படுத்துவார்கள்.
அப்புறம் என்ன?
டின்னர் முடிந்ததும் அடுத்த மேட்டருக்கு…. மேட்டருக்குத்தான்…. அடிபோடுவார்கள்.
சான்ஸ் தருவதாகச் சொல்லியிருக்கிறாரே…
இந்த நேரத்தில் முடியாது என்று மறுத்தால் சான்ஸ் கிடைக்காமல் போயிவிடும்.
எனவே மறுக்க மாட்டோம் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
அந்த எண்ணத்தில்தான் ஏதாவது ஒரு ஹோட்டலில் ஏற்கனவே ரூம் போட்டு வைத்திருப்பார்கள்.
அதே கூட்டிக் கொண்டு போய்…
எத்தனை ஹீரோக்களைப் பார்த்திருக்கிறேன்?
கடைசியில் ஆசையைத் தணித்துக் கொண்டதும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.
நமக்கு சான்ஸ் தருவதாகச் சொன்ன படத்தில் வேறு ஒருத்தி பெரும்பாலும் பம்பாய்காரி எவளாவது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பாள்.

இந்த விஷயத்தில் கில்லாடியாகிவிட்டான்.
“என் கூட டின்னருக்கு வர விருப்பமில்லையா?”
“சேச்சே, அப்படி இல்லை… இப்ப ஷூட்டிங் இருக்கு. அதான் சொன்னேன்.
ப்ரீயா இருக்கும்போது நானே உங்களைக் கூப்பிடறேன். போவோம்” என்று சமாளித்தேன்.
நான் சொன்ன பதில் அவனை டென்ஷனாக்கியிருக்க வேண்டும் பட்டென்று போனை கட் பண்ணினான்.
அப்பாடா, சனியன் பிடிச்சவன்கிட்டேயிருந்து இப்போதைக்கு தப்பித்தோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
(சொல்றேன்)