ஆசையாய் நான் கட்டிய கற்பனைக் கோட்டையை இடித்து விட்டு அந்த நடிகையுடன் காதல்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறான்.

1595

ஆசையாய் நான் கட்டிய கற்பனைக் கோட்டையை இடித்து விட்டு அந்த நடிகையுடன் காதல்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறான்.

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 17

 

காதல் தோல்வியில் என் உயிரை மாய்த்துக் கொள்ள இருந்தேன்.

அப்படி செய்திருந்தால் ஒரு துரோகிக்காக உயிரை விட்ட பாவமும் என்னைச் சேர்ந்திருக்கும்.

ஆமாம்.

அவன் துரோகிதான்.

காதல் துரோகி.

என்னை காதலிப்பதுபோல் நடித்து இலவசமாக என்னை பல தடவை அனுபவித்த பாவி.

தனிமை சந்தர்ப்பங்களில் அவன் தாபத்துடன் என்னை அணைக்கும்போது, சின்ன மறுப்புகூட சொல்லாமல் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு என்னை முழுசாய் ஒப்படைத்திருக்கிறேன்.

எத்தனை தடவை?

பல தடவை?

அவனுடன் படுப்பதற்கு பதில் எவனுடனாவது பணத்துக்கு படுத்திருந்தால் என் பேங்க் பேலன்ஸ் உயர்ந்திருக்கும்.

வேசி மகன்…

என்னை ஏமாற்றி விட்டான்.

நல்லவேளை. கல்யாணத்திற்கு முன்பே அவனது சுயரூபம் தெரிந்ததே.

அவனை நம்பிக் கழுத்தை நீட்டியிருந்தால் என் கதை?

அப்பா, அம்மாவை எதிர்த்துக் கொண்டு அவன் பின்னால் போய் இப்படி என்னைத் தூக்கி எறிந்திருந்தால் என் நிலைமை என்னவாகியிருக்கும்?

நினைக்கவே பகீரென்றது.

அப்படி நேராமல் கல்யாணத்திற்கு முன்பே அவனைப் பற்றித் தெரிந்து கொண்டேனே… அதை நினைத்து நான் சமாதானமானாலும் அவன் எனக்குச் செய்த துரோகத்தை என்னால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியவில்லை.

என்னை, என் காதலை அவன் நிராகரிக்க என்ன காரணம் என்ற கேள்வி என் மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தது.

நான் அவனுக்குத் திகட்டி விட்டேன். அதுதான் காரணமாக இருக்கும்.

அதனால்தான் என் நடத்தையில் சந்தேகத்தைக் கிளப்பி என் உறவை வெட்டிவிட்டான்.

அதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவனைக் காதலிக்க ஆரம்பித்ததும் அவனுக்கு எந்தளவுக்கு நான் உண்மையாக இருந்தேன் தெரியுமா?

அவனை என் மனசுக்குள் புருஷனாக வரித்துக் கொண்டிருந்தேன். அவனைத் தவிர வேறு யாரும் நம்மைத் தொடக் கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன்.

இது புரியாமல் அம்மா எப்போதும் போல் கையில் பொக்கேயைக் கொடுத்து ஹோட்டலுக்குப் போகச் சொன்னாள் ஒருநாள்…

“மாட்டேன்” என்று கறாராகச் சொன்னேன்.

நானா அப்படிச் சொல்வது? என்று அம்மா அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தாள்.

கை நீட்டி அடிக்கவும் செய்தாள்.

அவனுக்காக அந்தக் கொடுமையையும் சகித்துக் கொண்டேன்.

“உனக்கு பணம்தானே வேணும்? நான் நடிச்சு சம்பாதிக்கிற பணம் எல்லாத்தையும் எடுத்துக்கோ, எனக்குன்னு பத்து பைசா வேண்டாம்.

ஆளைவுடு. அதுக்கு மேல அவன்கிட்ட இவன்கிட்ட போங்கிற வேலையெல்லாம் இனிமே வேண்டாம்.

அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.

இதையும் மீறி என்னை வற்புறுத்தினா நான் தற்கொலை பண்ணிக்குவேன்.

அப்புறம் உன் நிலைமை என்னாகும்னு யோசிச்சுப்பாரு” என்று கண்டவனுக்கும் முந்தானை விரிக்கும் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

அதேபோல், நான் நடிக்கும் படத்தின் டைரக்டர்கள், புரட்யூஸர்கள் பல்லைக் காட்டினாலும் அவர்களைப் பார்வையால் எரித்தேன்.

அவர்கள் என் சதையை ருசிக்கக் தருணம் பார்க்கிறார்கள் என்று தெரிந்தால் அதற்கு இடம் கொடுக்காமல் என்னைச் சுற்றி எப்போதும் யாராவது இருப்பது போல் பார்த்துக் கொண்டேன்.

தனியாக இருந்தால்தானே இந்தத் தொல்லை?

அவனுக்காக என்னை நான் இப்படி எல்லாம் காப்பாற்றிக் கொண்டது தெரிந்தால் இப்படி செய்திருப்பானா? பாவி.

என்னை அவன் வெட்டிவிட நான் திகட்டிப் போனது மட்டுமல்ல காரணம் என்று சீக்கிரமே தெரிந்து கொண்டேன்.

அவன் வேறு ஒரு நடிகையைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறான்.

ஆசையாய் நான் கட்டிய கற்பனைக் கோட்டையை இடித்து விட்டு அந்த நடிகையுடன் காதல்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறான்.

அந்த விஷயத்தை என்னிடம் முதலில் சொன்னது என் தோழியான சக நடிகைதான்.

என்னால் நம்ம முடியவில்லை.

“சத்தியமா சொல்றேன் நிலா. அந்த படத்தில நானும் ஒரு ஹீரோயின்.

அவுட்டோர் போனப்ப அவனும் அவளும் பண்ணின ரொமான்ஸை என் கண்ணால பார்த்தேன்.

தெய்வீகக் காதலர்கள் மாதிரி ரெண்டு பேரும் இணை பிரியாமத்தான் இருந்தாங்க.

ஹோட்டல்ல ஒரே ரூமுல தங்கிக்கிட்டு அவங்க பண்ணின லீலைகள் இருக்கே… யூனிட்டுல உள்ளவங்களே அவங்களைப் பத்தி அசிங்கமா கமெண்ட் அடிச்சாங்க…”

அதிர்ச்சியில் இன்னமும் நம்ப முடியாமல் அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“அவள் இருக்காளே சரியான மாய்மாலக்காரி.

கையில அவளுக்குப் படம் இல்லை.

இந்த மாதிரிதான் அவளோட பொழப்பு ஓடுது.

இவ்வளவு நாள் அந்த சீனியர் ஹீரோகூட சுத்திக்கிட்டிருந்தாள்.

முடிஞ்ச அளவுக்கு அவரோட பணத்தைக் கறந்துட்டு இப்ப இவனைப் புடிச்சிருக்கா…

வேடிக்கைய பாரு.

அவனை நடுத்தெருவுல நிறுத்தப் போறா…”

நிறுத்தணும்.

அதை நான் பார்க்கணும் என்ற ஆவேசம் எனக்குள் எழுந்தது.

அவன் என்னை தூக்கி எறிந்ததற்கு அந்த நடிகை மீது கொண்ட காதல் மட்டும் காரணமாக இருக்க முடியாது என்று தோன்றியது எனக்கு.

அவளைவிட அழகில் நான் எந்தளவுக்கு குறைந்து போய்விட்டேன்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவள் பெரிய அழகி கிடையாது.

என்னைவிட கலர்.

அவ்வளவுதான்.

உடம்பில் சதையே இருக்காது.

எலும்பும் தோலுமாக இருப்பாள்.

அதனால்தான் அவளுக்குத் தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை.

அவள் மீது அவனுக்குக் காதல் வருவதாவது?

என்னைத் தூக்கிப் போட்டது போல் அவளையும் ஆசை தீர அனுபவித்துவிட்டு ஒருநாள் தூக்கிப் போட்டுவிடுவான்.

அப்புறம் என்ன காரணம்?

அவனது மார்க்கெட் திடீரென உயர்ந்ததுதான் உண்மையான காரணமாக இருக்க முடியும்.

அவன் நடித்து, எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம் அவன் ஆசைப்பட்டபடியே சூப்பர் ஹிட்டானது.

பத்திரிகைகள் அவனைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடின. ஏகப்பட்ட படங்கள் புக்கானது.

சுருக்கமாகச் சொன்னால், அவனுடைய ரேன்ஜ் எங்கேயோ போய்விட்டது.

இந்த நேரத்தில் காதல், கல்யாணம் என்றால், தன் இமேஜ் போய்விடும் என்று நினைத்திருப்பான்.

அதனால்தான் என் மீது அபாண்டமாகப் பழி சொல்லி கழற்றி விட்டுவிட்டான்.

போகட்டும் சனியன் என்று அவனைப் பற்றி நினைப்பதையே விட்டு விட்டேன்.

எனக்குத் துரோகம் பண்ணியதற்கு ஒருநாள் அனுபவிப்பான்.

என் வயிற்றிறெரிச்சல் அவனை சும்மாவிடாது.

விடவில்லை.

ஃபைட் சீனில் நடிக்கும்போது ஒரு நாள் விபத்து ஏற்பட்டு அவனுக்கு முதுகில் பலமான அடி.

நான்கைந்து ஆபரேஷன்கள் செய்தால்தான் மறுபடி சகஜமாக நடிக்க முடியும் என்று பேசிக் கொண்டார்கள். நான் உள்ளுக்குள் ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டேன்.

அவன் என்னைக் காதலித்து ஏமாற்றினான் என்றால் அவனது போட்டியாளரான என் காதலுக்கு எமனாக வந்த அந்த இன்னொரு இளம் ஹீரோ இருக்கானே…

இவன் வேறு என்னை விரட்ட ஆரம்பித்தான்.

இவனுக்கும் என் சதை வேணும்.

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்