முதல் முறையாக ஒரு ஆணின் அணைப்பு எனக்கு இன்பத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. ஆணின் ஸ்பரிசம் இத்தனை சுகமானதா?

2445

முதல் முறையாக ஒரு ஆணின் அணைப்பு எனக்கு இன்பத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. ஆணின் ஸ்பரிசம் இத்தனை சுகமானதா?

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 13

 

அவன் காதலை அந்த கணமே மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன்.

அவனுக்குத் தலைகால் புரியாத சந்தோஷம்.

என்னை கட்டித் தழுவி கொண்டான்.

முதல் முறையாக ஒரு ஆணின் அணைப்பு எனக்கு இன்பத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்தது அப்போதுதான்.

ஆணின் ஸ்பரிசம் இத்தனை சுகமானதா?

இதற்கு முன் இப்படியொரு அனுபவம் கிடைத்ததில்லை.

அவன் அணைப்புக்குள்ளே காலம் முழுக்க கட்டுண்டு கிடக்க வேண்டும் போல் இருந்தது.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் கட்டுண்டு கிடந்தோம்.

நாங்கள் ஜோடியாக நடித்த அந்தப் படத்தின் ஷூட்டிங் முடியும் வரை ஒவ்வொரு கணமும் மறக்க முடியாதவைதான்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். யாராவது அருகில் வந்தால் பேச்சை மாற்றிவிடுவோம்.

படத்தில் காதலர்களாக நடித்தது இன்னும் வசதியாக இருந்தது.

காதல் காட்சி என்றால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

நடிப்பு என்ற பெயரில் எங்கள் மனதில் இருக்கும் ஆசைகளை எல்லாம் தீர்த்துக் கொண்டோம்.

அவனது ஸ்பரிசம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அவனது வாசனையும்தான்.

அதை அவனிடம் சொன்னேனோ இல்லையோ, அதன் பிறகு எனக்காக வேண்டுமென்றே நிறைய ரீடேக் வாங்குவான்.

படத்தில் எங்கள் காதலுக்கு குறுக்கே நிற்கும் என் அம்மாவை எரிச்சல்படுத்துவதற்காக என் அம்மா முன்னால் என்னை உதட்டோடு உதடு முத்தமிடுவது போல் காட்சி.

ரிகர்சல் பார்க்கும்போது டைரக்டர் சொல்லிக் கொடுத்தபடி கட்டி அணைத்து என் உதட்டில் தன் உதட்டை பதித்தான்.

கிறங்கிப் போனேன்.

அதை அவன் காதில் கிசுகிசுப்பாய் சொன்னேன்.

அவ்வளவுதான்.

டேக்கின் போது வேண்டும் என்றே சொதப்பி, இன்னொரு டேக், இன்னொரு டேக் என்று ஏகப்பட்ட டேக்குகள் வாங்கி மறுபடி மறுபடி முத்தமிட்டான்.

யப்பா. அப்போதே செத்துப் போகலாம் என்று நினைத்தேன்.

சந்தோஷமாக சாவது எவ்வளவு பெரிய விஷயம்?

அந்தப் படம் முடியும் வரை இப்படித்தான்.

காதல் சாட்சிகளில் நடிக்கவில்லை நாங்கள் நிஜமாகவே வாழ்ந்தோம்.

டைரக்டர் ‘ரொம்ப இயல்பா பண்றீங்க. உங்க ரெண்டு பேரோட நடிப்பும் பிரம்மாதம்’ என்று பாராட்டினார்.

படம் ரிலீஸானதும் பத்திரிகை விமர்சனங்களில் கூட எங்களின் நடிப்பு இயல்பாக இருப்பதாகவும், நிஜ காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் எழுதினார்கள்.

நாங்கள் நிஜத்திலும் காதலர்கள் என்று அவர்களுக்கு எங்கே தெரியும்?

யாருக்குமே தெரியாது.

அந்தளவுக்கு எங்களின் காதலை ரகசியமாக வைத்திருந்தோம்.

காரணத்தோடுதான்.

எங்கள் காதல் விவகாரம் வெளியே தெரிந்தால் மறுநாளே பத்திரிகைகளில் செய்தியாகும்.

அம்மாவின் பார்வையில் பட்டால் தொலைந்தேன்.

என்னை நம்பித்தான் அவள் மனக்கோட்டைகள் கட்டியிருக்கிறாள்.

அதெல்லாம் ஒரு நொடியில் இடிந்து தரைமட்டமாவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.

என்ன செய்தாவது என்னை அவனிடமிருந்து பிரித்து விடுவாள் என்பது என் பயம்.

அவனுக்கோ வேறு காரணம் இருந்தது.

அவன் சொன்னபோது நியாயமாகவே பட்டது எனக்கு.

”ரெண்டு வருஷம் படம் இல்லாம வீட்டுல உக்காந்திருந்த எனக்கு இப்பத்தான் ரீலைஃப் கிடைச்சிருக்கு. இந்த நேரத்தில் காதல் அது இதுன்னு நியூஸ் வந்தா என் இமேஜ் போயிடும். அப்புறம் படங்கள் வராமல் போயிட்டா கஷ்டம்.

இன்னொரு பிரேக் கிடைக்காது.

ஸோ… இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேணாம்.

முதல்ல என் படங்கள் ரிலீஸாகட்டும்.

நாலைஞ்சு படங்களை கமிட் பண்ணிக்கிட்டு அதுக்கப்புறம் நம்ம காதலை வெளியே சொல்லலாம்.

அடுத்த வருஷமே உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.

அதுக்குள்ளே உன்னோட படங்களை எல்லாம் நீ முடிச்சுக் கொடுத்திடு.”

எதிர்காலத்தை சரியாகத்தான் திட்டமிட்டு வைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன்.

என் ஆசை நாயகனுக்காக ஒரு வருஷம் என்ன, ஓராயிரம் வருஷம் வேண்டுமானாலும் காத்திருப்பேன்.

இனி அவன் வேறு நான் வேறு இல்லை.

நான்தான் அவன். அவன்தான் நான்.

அவனது முன்னேற்றம்தான் என் முன்னேற்றம்.

அவன் பெரிய ஸ்டாரானால் அதனால் எனக்குத்தானே பெருமை?

எனக்குப் புருஷனாகப் போகிறவன் அவன்.

அவனது வளர்ச்சிதானே எனக்கு முக்கியம்?

நான் இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க, அவன் திட்டம் வேறு மாதிரி இருந்தது பிறகுதான் எனக்குத் தெரிந்தது.

ஆமாம். அவன் நான் உயிருக்குயிராய் நேசித்த அந்த ராஸ்கல், தேவடியாப் பையன் என்னை மோசம் செய்துவிட்டான்.

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்