கட்டி அணைத்து நடிக்க வேண்டிய காட்சிகளில் ஹீரோக்களின் கை கண்ட இடத்தில் தொடும். அதுவும் லாங்ஷாட் என்றால் சொல்லவே வேண்டாம்.

2172

கட்டி அணைத்து நடிக்க வேண்டிய காட்சிகளில்  ஹீரோக்களின் கை கண்ட இடத்தில் தொடும். அதுவும் லாங்ஷாட் என்றால் சொல்லவே வேண்டாம்.

என் கதை‘  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்

அத்தியாயம் – 11

ஷூட்டிங் போனால் ஹீரோக்கள், டைரக்டர்கள், புரெட்யூசர்களின் தொல்லை.

இன்னொரு பக்கம் பணத்துக்காக அழகர்சாமி ஏற்பாடு செய்யும் கஸ்டமர்களின் தொல்லை.

கஸ்டமர்களா அவர்கள்? கஷ்டமர்கள்.

என் உடம்புக்கு ஓய்வில்லாமல் போய்விட்டது.

இப்படியே போனால் சீக்கிரமே என் இளமையைத் தொலைத்து விடுவேன் என்று புரிந்தது.

எய்ட்ஸ் வந்து செத்துவிடுவோமோ என்ற பயம் கூட அவ்வப்போது என்னை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

ஒருநாளைக்கு ஒருத்தன் என்று ஆரம்பித்து… ஒரே நாளில் இரண்டு பேர்,  மூன்றுபேர்…. சமீபத்தில் ஒருநாள் ஒரேநாளில் நான்கு பேரிடம்  கூட…..

உவ்வே…. சொல்லும்போதே குடலை பிடுங்குகிறது.  என்வா ழ்க்கையே நரகமாகிவிட்டது.

இதிலிருந்து விடுபட வேண்டும்.

எப்படி என்றுதான் தெரியவில்லை.

யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயாவது போய்விடலாமா?

எங்கே போவது?

யோசித்தால்………. பதில் சூன்யம்தான்.

அல்லது, செத்துப் போய்விடலாமா?

தினம் தினம் செத்துப் போவதற்கு ஒரேயடியாய் செத்து விடுவது உத்தமம் என்று தோன்றியது.

ஆனால் தைரியம்தான் இல்லை.

அதற்கான மனவலிமை இருந்தாலாவது போய் சேர்ந்துவிடலாம்.

சதா நேரமும் இப்படியான எண்ணங்கள் என்னைத் தீவிரமாய் ஆட்கொண்டிருந்த நேரத்தில்தான், என் வாழ்க்கையில் நான் எதிர்பார்க்காத சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன.

இன்றைக்கு நம்பர் ஒன்னாக இருக்கும் அந்த இளம் ஹீரோவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க புக்கானேன்.

இன்றைக்கு மக்களால் தலயில் வைத்துக் கொண்டாடப்பட்டு வரும் அவன்  அன்ப்போறைக்துகு ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருந்தான்.

அந்தப் படம்  கூட வெற்றிப்படம் இல்லை… அட்டர்  ப்ளாப்.

அதனால் சினிமாவிலிருந்து காணாமல் போனவனை அழைத்து வந்து தன் படத்தில் சான்ஸ் கொடுத்திருந்தார் பெரிய டைரக்டர் ஒருவர்.

வெளிவரும் நிலையில் இருந்த அந்தப் படம் சூப்பர் ஹிட்டாகும் என்றும்,  அந்த ஹீரோ பெரிய ரேஞ்சுக்கு வருவான் என்றும் இண்டஸ்ட்ரியில் பேசிக்கொண்டார்கள்.

பத்திரிகைகளிலும் அவனைப் பற்றி பரபரப்பாக எழுதினார்கள்.

பந்தா பண்ணுவான்.

தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருப்பான் என்று நினைத்தேன்.

என் எதிர்பார்ப்புக்கு மாறாக அடக்கமாக இருந்தான்.

முதல் நாள் ஷூட்டிங்கின்போது டைரக்டர் என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

முதல் சந்திப்பிலேயே எனக்கு அவனை பிடித்துப் போனது.

பொதுவாய், ஹீரோக்களின் பார்வை மார்பைத்தான் துளைக்கும்.

சமயம் கிடைக்கும் போது டபுள் மீனிங்கில் பேச்சை ஆரம்பித்து கடைசியில் மேட்டருக்கு அப்ளிகேஷன் போடுவார்கள்.

இவன் வித்தியாசமாக இருந்தான்.

அவனது பார்வை நேர்மையாய் கண்களைப் பார்த்தது.

பேச்சில் துளியும் கெட்ட நோக்கம் இல்லை.

அதைவிட,  ரொம்ப ப்ரெண்ட்லியாகப் பழகினான்.

என்னிடம் மட்டுமில்லை.  படத்தில் நடித்த மற்ற நடிகைகளிடமும்தான்.

அதே நேரம் வலிய வந்து பேசும் பெண்களிடம் சற்று தள்ளியே இருந்தான்.

இன்னொரு கதாநாயகியாக நடித்த அந்த நடிகை கூட, ”என்ன நிலா… நான் நெருங்கிப் போனால்கூட அவன் விலகி விலகிப் போறான். ஆள் உஷ்ஷா இருப்பானோ?” என்று கமெண்ட் அடித்தாள்.

அவன் ஆண்மையை சந்தேகப்பட்டாள்.

கமெண்ட் அடித்த அவள் மீது ஏனோ எனக்கு கோபம் வந்தது.

அதே நேரம் அவனை நினைக்கும்போது ஆச்சர்யமாகவும் இருந்தது.

நிஜத்தில் மட்டுமல்ல, படத்தில் காதல் காட்சியில் நெருங்கி நடிக்கும்போதும் நாகரீகமாகவே நடந்து கொண்டான்.

காதல் காட்சிகளில் நடிக்கும்போது  ஹீரோக்கள் சில்மிஷத்தில் ஈடுபடுவார்கள்.

கட்டி அணைத்து நடிக்க வேண்டிய காட்சிகளில் அவர்களின் கை கண்ட இடத்தில் தொடும்.

அதுவும் லாங்ஷாட் என்றால் சொல்லவே வேண்டாம்.

நடிப்பு என்ற பெயரில் முடிந்த மட்டும் தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்வார்கள்.

ஒரு படத்தில் பிரபலமான அந்த சீனியர் ஹீரோவுக்கு காதலியாக அல்ல,  தங்கையாக நடித்தேன்.

அன்றைக்கு எடுக்கப்பட்ட  காட்சி…. என்னுடைய  அம்மா இறந்துவிட்டார்.  துக்கம் தாங்காமல் நான் அழ வேண்டும்.

அண்ணனான அந்த ஹீரோ என்னைக் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும்.

எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவனும் அழ வேண்டும்.

டைரக்டர்,

”ரெடி… ஸ்டார்ட் கேமரா… ஆக்ஷன்…”

– என்றதும் நான் அழ ஆரம்பிக்கிறேன்.

அந்த ஹீரோ என்னைக் கட்டி அணைத்தான்.

இந்த மாதிரி சீனில் சாதாரணமாக பட்டும்படாமல் அணைத்தாலே போதும்.

அவனோ…. என்னுடைய  எலும்புகள் நொறுங்குமளவுக்கு இறுக்கமாக  கட்டி  அணைத்தான்.

அணைத்தது மட்டுமல்ல, அவன் கைகள் தொடக் கூடாத இடத்தை எல்லாம் தொட்டன.

விரல்களால் என் பிராவின் கொக்கியை பிடித்து இழுத்தான்.

இத்தனைக்கும் அது உருக்கமான சீன்.

அழுது நடித்துக் கொண்டிருந்த எனக்கு பகீரென்றது.

அதற்கு மேல் என்னால் ஈடுபாட்டுடன் நடிக்க முடியவில்லை.

அவனிடமிருந்து விலக முயற்சி செய்தேன்.

அவனது பிடி இன்னும் அதிகமானது.

எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

அம்பது பேர் சுற்றி நிற்கிறார்கள்.

அத்தனை பேர் முன்னாலும் இப்படி நடந்து கொள்கிறானே…

பெண் என்பவள் ஆணுக்கு கிளர்ச்சியானவள்தான்.

அதற்காக இப்படியா?

இத்தனை பேர் முன்னால் எப்படித்தான்  அவனுக்கு காமஉணர்ச்சி வருகிறதோ?

இவன் தன் அக்கா, தங்கையை, அம்மாவை எப்படிப் பார்ப்பான்?

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்