என் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா? எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன்!

1753

என் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா? எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன்!

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 10

 

ப்ளாட், கார் என்று வாங்கிக் கொடுத்து அம்மாவை தாஜா பண்ணிவிட்ட அழகர்சாமி என்னை அந்த ஹோட்டலுக்குக் கூட்டிப் போனான் என்று சொன்னேனே…

அவனுடன் காரில் போகும்போது அவன் எடுக்கப் போகும் படம் சம்பந்தமாக யாரையோ பார்க்கப் போகிறோம் என்றுதான் நினைத்தேன்.

நான் இப்படி நினைக்கக் காரணம்…

போகும் வழியில் காரை நிறுத்தி அழகர்சாமி பொக்கே வாங்கியதுதான்.

ஹோட்டல் வந்ததும் அதை என் கையில் கொடுத்தான்.

இதை ஏன் என்னிடம் கொடுக்கிறான்?

உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை.

”ரிசப்ஷன்ல போய் ரூம் நம்பர் 101 எதுன்னு கேளு.

சொல்லுவாங்க.

நேரா அந்த ரூமுக்குப் போயிடு. அங்கே மிஸ்டர் சண்முகம் இருப்பார்.”

சரி என்று தலையாட்டிய எனக்கு இந்த பொக்கே எதற்கு? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

”சும்மாத்தான். ரூமுக்குள்ளே போனதும் அதைத் தூக்கி குப்பையில் போடு.” சிரித்தபடி சொன்னவன் தொடர்ந்து சொன்னதைக் கேட்டதும் அட! சண்டாளா என்று மனசுக்குள் அவனைத் திட்டினேன்.

”நீ ஒரு நடிகை. கையை வீசிக்கிட்டு ஹோட்டல் ரூமுக்குப் போறதை எந்த பத்திரிகைக்காரனாவது பார்த்தா என்னாவுறது? அதுக்குத்தான் இந்த செட்டப்.

கையில் பொக்கேயோட போனால் ஏதோ ஃபங்ஷனுக்குப் போறே. இல்லேன்னா… யாரையோ முக்கியமான ஆளை மீட் பண்ணப் போறேன்னு நினைச்சுக்குவாங்க.

அது மட்டுமல்ல, ஹோட்டல்காரங்களுக்கும் சந்தேகம் வராது பாரு?”

மாமா தொழிலில் கரைகண்டவனாக இருப்பான் போலிருக்கிறது.

என்ன டெக்னிக் பாருங்கள்?

உன் பொண்டாட்டிக்கும் பொக்கே கொடுத்து அனுப்புடா என்று அவன் சட்டையைப் பிடிக்க வேண்டும் போல் ஆவேசம் வந்ததை அடக்கிக் கொண்டேன்.

யார் கண்டது?

பொண்டாட்டியை மட்டுமல்ல பெத்த மகளையும் கூட அனுப்பி இருப்பான் இந்த மாமா பயல்.

இவனுக்கு பணம் ஒன்றே குறிக்கோள்.

அன்றைக்கு வாங்க ஆரம்பித்த பொக்கேதான்.

இதுவரை நூற்றுக்கணக்கான பொக்கேகளை குப்பைக் கூடையில் போட்டிருக்கிறேன்.

விடிந்து, வீட்டுக்குக் கிளம்பும்போது, குப்பைக் கூடையில் நான் வீசிய பொக்கேயைப் பார்ப்பேன்.

நேற்று மலர்ச்சியாய் இருந்த பூக்கள் எல்லாம் வாடி வதங்கிப் போயிருக்கும்.

அதைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் கண்களில் நீர் முட்டும்.

ஒருவகையில் நானும் இந்த பொக்கேயும் ஒன்றுதானே?

சின்ன வித்தியாசம், அந்த பூக்கள் யாரும் தொடாமலே வாடிப் போய்விட்டன.

நான்? பல பேர் தொட்டதால்….

சில நாட்கள் ஷூட்டிங் இருக்கும்.

சில நாட்கள் இருக்காது.

ஆனால் இதற்கு ஓய்வு என்பதே கிடையாது.

இருபத்தி நாலு மணிநேர பிசினஸ்.

இரவில் களைகட்டும் பிசினஸ்.

ஆறு மணியோடு ஷூட்டிங் முடிந்துவிடும் என்று தெரிந்தால்போதும் அழகர்சாமிக்கு அம்மா போன் போட்டுவிடுவாள்.

”நிலா ஃப்ரீயாத்தான் இருக்கா!” என்று தகவல் சொல்வாள்.

அழகர்சாமிக்குப் புரிந்துவிடும்.

எங்கேதான் ஆட்களைப் பிடிப்பானோ?

அடுத்த அரைமணியில் போன் அலறும்.

ஏதாவது ஒரு ஹோட்டல் பேரைச் சொல்லி அங்கே போகும்படி சொல்வான்.

மெட்ராஸில் என் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை.

வெட்கத்தை விட்டு சொல்லவா? எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன்!

இப்போதெல்லாம் அழகர்சாமி என்னோடு வருவதில்லை.

போனிலேயே வழிகாட்டுவதோடு சரி.

அவன் இருக்கும் கட்சி ஆளுங்கட்சியாகி விட்டது.

கட்சியில் முக்கியப் புள்ளியான இவன் மாமா வேலை பார்ததால் எதிர்க்கட்சிக்காரன் சும்மா விடுவானா?

அதனால் திரைமறைவில் இருந்து கொண்டே என்னைப் போன்ற பெண்களை சப்ளை செய்கிறான்.

சில நேரங்களில் ஒரே ஹோட்டலுக்கு அடுத்தடுத்த நாள் போக வேண்டியிருக்கும்.

அப்போது பொக்கே வாங்க வேண்டிய அவசியமில்லை. தினமும் பொக்கேயோடு போனால் சந்தேகம் வருமே…

இந்த மாதிரி நேரங்களில் முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாதான் எனக்கு பாதுகாப்பு கவசம்.

அதை அணிந்து கொண்டு போவேன். அப்படிப் போகும்போது என்னை யாருக்குமே அடையாளம் தெரியாது.

இதுவும் ஹைடெக் மாமா பயல் அழகர்சாமியின் ஐடியாதான்!

அனேகமாக எல்லா நடிகைகளும் என்னைப் போலவே இப்படி ஒரு பர்தாவை நிச்சயமாக வைத்திருப்பார்கள்.

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்