கதாநாயகனா கிறார் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின்

686


சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா – 2 படத்தில் இடம் பெற்ற “சில்லாட்ட பில்லாட்ட” என்ற பாடலில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடனமாடினார் அவரது தம்பி எல்வின்.

லாரன்ஸைப்போலவே தோற்றம் கொண்ட எல்வினை கதாநாயகனாக்க திட்டமிட்டு களத்தில் இறங்கி இருக்கிறார் லாரன்ஸ்.

நடனம் மட்டும் இல்லாமல் six pack உடற்கட்டுடன் நாயகனுக்கான அனைத்து பயிற்சிகளிலும் தனது சகோதரரை ஈடுபடுத்தி வருகிறார் லாரன்ஸ்.

எல்வினை ஹீரோவாக நடிக்க வைக்கும் எண்ணத்தில் நிறைய இளம் இயக்குனர்கள் லாரன்ஸிடம் கதை சொல்லி வருகிறார்களாம் (நெசமாவா?).

அவர்களிடம் ராகவா லாரன்ஸ் கதைகளை கேட்டு தனது சகோதரருக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து வருகிறாராம்.

எல்வின் ஹீரோவாக நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார் ராகவா லாரன்ஸ்.