கரைசேருமா ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்?’ Comments Off on கரைசேருமா ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்?’

மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் துல்கர் சல்மானால் தமிழில் தலையெடுக்கவே முடியவில்லை.

அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, ரிது வர்மா நடிக்கும் இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது.

ஆனால் படம் பிசினஸ் ஆகவில்லை. கேரளாவை சேர்ந்த இப்படத்தின் தயாரிப்பாளருக்கு யார் சொன்ன ஆலோசனையோ தெரியவில்லை. ட்விட்டரில் படங்களை புரமோட் பண்ணுபவர்களுக்கு பணம் கொடுத்து படத்தை புரமோட் செய்தார். அப்படியும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை யாரும் வாங்கவில்லை.

படத்துக்கு செலவு செய்த தொகையில் பாதி கிடைத்தாலும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை கொடுத்துவிட தயாரிப்பாளர் தயாராக இருக்கிறாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் நடித்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் நடித்தால் படத்தை பிசினஸ் செய்துவிடலாம் என்று யாரோ சொன்னதன் அடிப்படையில் பிரதாப் என்ற கேரக்டரில் கௌதம் வாசுதேவ் மேனனை நடிக்க வைத்துள்ளார்கள்! ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் தயாரிப்பாளர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் நடிக்க சம்மதித்தாராம் கௌதம் வாசுதேவ் மேனன்.

இந்தப்படத்துக்கு கேரளாவில் புகழ்பெற்ற இசைக்குழுவான மசாலா காஃபி இசை குழுவினர் இசை அமைத்திருக்கிறார்கள்.

‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிய படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர ‘வான்’என்ற படத்திலும் நடித்து வருகிறார் துல்கர்.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
தமிழில் வெளியாகும் ராம் சரணின் படம்

Close