தமிழ்நாட்டின் அம்பது வருட அரசியல் தெரியும்  எனக்கு…! – இயக்குநர் விஜய்

119

 

இன்றைய தேதியில் அடுத்தடுத்து படங்களை இயக்கிக் கொண்டு பிசியாக இருக்கும்… இயங்கும் இயக்குநர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இப்படிப்பட்ட பிசி இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் ஏ.எல்.விஜய்.

இவருடைய இயக்கத்தில் உருவான ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் வாட்ச்மேன், பிரபுதேவா நடிக்கும் தேவி 2 என இரண்டு படங்கள் இம்மாதம் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

வாட்ச்மேன் படத்தின் இறுதிகட்ட பணிகளில்  பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த  இயக்குநர் விஜய்யுடன் ஒரு சந்திப்பு….

 

  • வாட்ச்மேன் படம் பற்றி…

ஒவ்வொரு படத்தையும் டிஃப்ரண்ட்டான ஜானர்ல பண்ணணும்னு முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். நிறைய ஜானர்ல படம் பண்ணிட்டேன். ஆனால் த்ரில்லர் மட்டும் இதுவரைக்கும் பண்ணவே இல்லை. வாட்ச்மேன் நான் பண்ணின முதல் த்ரில்லர் படம். ஜி.வி. பிரகாஷ் எனக்கு 13 வருஷ ஃப்ரண்ட். அவரை வச்சு ஒரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி நிறைய கதைகளை அவரோட டிஸ்கஸ் பண்ணினப்ப இந்தக்கதை அவருக்குப் பிடிச்சது.

  • நாயை வச்சு ஏகப்பட்ட படங்கள் தயாராகி வருவதாக செய்தி. உங்கள் படத்திலும் நாய்…

மத்த படங்கள் பத்தி எனக்கு தெரியாது. வாட்ச்மேன் படம் ஒருவருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்ச படம். என்னுடைய படத்தில் நாய்க்கு மிகப்பெரிய ரோல் இருக்கிறது. படத்தின் செகண்ட் ஹீரோன்னே சொல்லலாம். படத்துக்கும் யு.எஸ்.பி.யும் நாய்தான். அதனால் நிறைய நாய்களை வரவைத்து ஆடிஷன் எல்லாம் பண்ணினோம். கடைசியில் புரூனோவை செலக்ட் பண்ணினோம். புரூனோ பாலிவுட்டுல ஸ்டார் மாதிரி. அக்ஷய்குமார், தோனி கூட எல்லாம் நடித்த நாய். வெல் டிரெய்ன்ட். பல படங்களில் நாய் நடித்து பார்த்திருக்கிறோம். வாட்ச்மேன் படத்தில் புரூனோவின் பர்ஃபாமன்ஸ் வேற லெவல்ல இருக்கும்.

  • இசையமைப்பாளராக, நடிகராக உங்கள் பார்வையில் ஜி.வி.பிரகாஷ் எப்படி?

இசையமைப்பாளராக அவரைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால்… அசாத்தியமான திறமைசாலி. ஒரு பாடலுக்கு ட்யூன்போடும்போதே இந்தப் பாட்டு ஹிட்டாகும் என்று உறுதியாக சொல்வார். அந்தளவுக்கு இசைஞானம் உள்ளவர். பாடல்கம்போஸிங்கில் அடிக்கடி நாங்கள் சண்டை எல்லாம் போட்டுக்கொள்வோம். எங்கள் காம்பினேஷனில் நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறோம். நடிகர் ஜி.வி. பற்றி சொல்றதுன்னா… தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாட்டுலதான் முதல்முறையாக முகம் காட்டினார். அந்தப்பாட்டு ரெக்கார்டிங் பண்ணி முடிச்சதுக்கப்புறம் இந்த சாங்குல நானும் வர்றேனேன்னு சொன்னார். விஜய் சார்கிட்ட சொன்னப்ப வரட்டும் சூப்பரா இருக்கும்னு சொன்னார். அப்ப ஜி.வி. ரொம்ப ஷை டைப்பா இருப்பார். ஆனாலும் நல்லா டான்ஸ் பண்ணினார். க்யூட்டா இருக்கார்னு விஜய் சார் கூட பாராட்டினார். அப்படி இருந்த ஜி.வி., பாலா, ராஜீவ்மேனன், வசந்தபாலன்னு பெரிய பெரிய டைரக்டர்கள்கிட்ட வொர்க் பண்ணி இன்னைக்கு மிகப்பெரிய நடிகராக வளர்ந்திருக்கார். ஒரே டேக்குல ஓகே பண்ணுகிற நடிகராகவும் இருக்கிறார். தனுஷ் சார். பிரபுதேவா சார் மாதிரி பக்கத்துவீட்டுப்பையன் இமேஜ் ஜி.வி.க்கு இருக்கிறது.

  • கதைக்காக எந்தளவுக்கு மெனக்கெடுகிறீர்கள்?

நிறைய மெனக்கெடுகிறேன். ஒரு கதையை எழுதி முடித்த பிறகு…அதை கூடுதல் நம்பகத்தன்மையோடு ஆடியன்ஸுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மதராசப்பட்டணம் படத்துக்காக நிறைய பேரை சந்திச்சு ஏகப்பட்ட தரவுகளை திரட்டினேன். இன்னைக்கு மெட்ராஸ் பத்தி நாலு மணி நேரம் என்னால் லெக்சர் எடுக்க முடியும். அவ்வளவு விஷயங்கள்  தெரிஞ்சுகிட்டேன். தெய்வத்திருமகள் படம் பண்ம்போது ஆட்டிசம்னா என்ன, பார்டர்லைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால பாதிக்கப்பட்டவங்களுக்கு சைக்லாஜிகலா என்னென்ன பிரச்சனைகள் வரும்னு  எனக்கு தெரியும். ஜெயலலிதா பயோபிக் பண்ணுவதற்காக அவங்க சம்மந்தப்பட்ட அத்தனை புத்தகங்களையும் படித்தேன். தமிழ்நாட்டின் அம்பது வருட அரசியல் வரலாறை தெரிஞ்சுக்கிட்டேன். இந்தப்படங்கள் மட்டுமல்ல என்னுடைய எல்லாப் படங்களுக்கும் கதை குறித்து ரிசர்ச் பண்ணுவதற்காகவே ஆர் அண்ட் டி அதாவது – ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் – என்றொரு டீமே வைத்திருக்கிறேன்.

  • அண்மைக்காலமாக ஆபாசமாக படம் எடுக்கும்போக்கு அதிகமாகிவிட்டதே… சமீபத்தில் கூட சூப்பர் டீலகஸ்…

இது என்னுடைய கொள்கை. மத்தவங்க பத்தி நான் நான் எதுவும் சொல்ல விரும்பலை. நான் ஃபாலோ பண்ணுவதை சரி தவறு என்றோ, அவங்க பண்ணுவதை சரி தவறு என்றோ சொல்ல விரும்பவில்லை. இங்கே கருத்து சுதந்திரம் இருக்கு.

– ஜெ.பிஸ்மி