‘சூப்பர் டீலக்ஸ்’ விஜய்சேதுபதி… பெண்ணா? திருநங்கையா?

1561

‘ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா பல வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்தப்படத்தை இயக்குகிறார்.

மலையாளப்பட ஹீரோவான ஃபஹத் ஃபாசில் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று பெயரிட்டிருக்கிறார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தில் அவர் திருநங்கையாக நடிக்கிறார் என்று ஏற்கனவே உறுதிசெய்யப்படாத தகவல் வெளியாகியிருந்தநிலையில் தற்போது அந்த வேடம் குறித்த ரகசியம் வெளிப்பட்டிருக்கிறது.

அதாவது, பெண் வேடத்தில் இருக்கும் விஜய்சேதுபதியின் ஒரு புகைப்படத்தை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

அதோடு, இந்தப்படத்தில் அவரது கேரக்டர் பெயர் ஷில்பா என்றும் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த வருடம் வெளியான ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் நடித்திருந்தார்.

ரெமோ படத்துக்கு முன் தயாராகி இன்னும் வெளிவராமல் கிடப்பில் கிடக்கும் ‘சிகை’ என்ற படத்தில் வளர்ந்து வரும் நடிகரான கதிர் பெண் வேடம் போட்டு நடித்திருக்கிறார்.

இந்தநிலையில் இப்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதியும் பெண் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில், விஜய்சேதுபதியுடன் சமந்தா, நதியா, மிஷ்கின், காயத்ரி, பகவதி என நட்சத்திரக்கூட்டமே நடிக்க இருப்பதாக தகவல்.

இசை யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு பி.எஸ்.வினோத், நீரவ்ஷா, படத்தொகுப்பு சத்யராஜ் என பக்காவான கூட்டணியுடன் களம் இறங்குகிறார் தியாகராஜன் குமாரராஜா.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது பெண் வேடத்திலா? திருநங்கை வேடத்திலா? அவரது கெட்டப்பைப் பார்த்துவிட்டு மக்கள்தான் சொல்ல வேண்டும்.

பாருங்க மக்களே…