கார்த்திக் சுப்பாராஜ் படம் கைமாறிய பின்னணி…

429

பேட்ட’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது.

இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

ஒய்நாட் ஸ்டுடியொஸ் நிறுவனத்தின் 18-ஆவது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக வினோத் ராஜ்குமார் கவனிக்க, விவேக் ஹர்ஷன் படதொகுப்பு செய்கிறார். சண்டை காட்சிகளை அன்பறிவ் அமைக்கிறார்.

இந்த படத்தை முதலில் தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் பேனரில் தயாரிக்க திட்டமிட்டிருந்தார் தனுஷ்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய இறைவி படத்தின் படு தோல்வி காரணமாக இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கைமாற்றிவிட்டார்.

அதன் பிறகு இப்படத்தின் பிரீ புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

படப்பிடிப்பு துவங்கவிருந்தநிலையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டதால் படம் ட்ராப் செய்யப்பட்டது.

பல வருடங்களுக்குப் பிறகு அந்தப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியொஸ் நிறுவனம் அண்டர்டேக் செய்துள்ளது.