சிவகார்த்திகேயனுக்கு இயக்குநர் பாலா வைத்த செக்…

870

ஓட்டப்பந்தயத்தில் தனியாக ஓடுகிறவன் வெற்றிபெற்றதாக சொல்வது எப்படி அபத்தமோ….

அப்படியொரு அபத்தமான வழியில்தான் பல ஹீரோக்கள் ‘வெற்றிப்படங்களை’க் கொடுத்து வருகிறார்கள்.

அதாவது, மற்ற ஹீரோக்களின் படங்கள் வெளியாகாத நாளை தேர்வு செய்து அந்தநாளில் தன்னுடைய படத்தை வெளியிட்டு வசூலை அள்ளி, வெற்றிப்படம் கொடுத்ததாக காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் வெற்றிரகசியமும் இதுதான்.

இதே யுத்தியில் தற்போது அவர் நடித்து வரும் வேலைக்காரன் படத்தை வெற்றிப்படமாக்க திட்டமிட்டிருந்தனர்.

தன்னுடைய நண்பர் பெயரில் சிவகார்த்திகேயன் ஆரம்பித்துள்ள 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் படநிறுவனம் தயாரித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்தப் படம் செப்டம்பர் 29-ம் தேதி வெளிவரவிருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘நாச்சியார்’ படத்தை செப்டம்பர் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

‘நாச்சியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட போதே, செப்டம்பர் வெளியீடு என குறிப்பிட்டு இருந்தார்கள். அதன்படி செப்டம்பர் 29-ம் தேதியை தேர்வு செய்துள்ளார் பாலா.

‘வேலைக்காரன்’ படம் வெளியாகும் அதேநாளில் பாலாவின் ‘நாச்சியார்’ படமும் வெளிவரவிருப்பதால், போட்டியில்லாமல் வந்து பெட்டியில் பணத்தை அள்ளலாம் என்று சிவகார்த்திகேயன் தரப்பினர் போட்டு வைத்த கணக்கு தப்பாகிவிட்டது.