ஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா?

87

விஜய்தேவரகொண்டாவின் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அர்ஜுன் ரெட்டி’.

இந்த படத்தை தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க ‘வர்மா’ என்ற பெயரில் இயக்கினார் பாலா.

‘வர்மா’ ரிலீஸுக்கு தயாராகிய நிலையில் படத்தைப் பார்த்த விக்ரம் குடும்பத்தினர் படு அப்செட்.

இந்த படம் வெளியானால் தன்னுடைய மகனின் எதிர்காலம் நாசமாகிவிடும் என்பதை உணர்ந்தனர்.

எனவே வர்மா படத்தை ரிலீஸ் செய்வதில்லை இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டியிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரமை மீண்டும் நடிக்க வைத்து ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்தனர்.

‘ஆதித்யா வர்மா’வில் துருவ் விக்ரமுடன் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். இவர்களுடன் ப்ரியா ஆனந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இசை அமைத்த ரத்தனே இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.

ஒளிப்பதிவை ரவி.கே.சந்திரன் கவனித்துள்ளார்.

‘ஆதித்யா வர்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டன.

‘ஆதித்யா வர்மா’ படத்தின் இயக்குநர் கிரிசாயா என்றாலும் உண்மையில் படத்தை இயக்கியதே விக்ரம்தானாம். தான் நடிக்க வேண்டிய படங்களை தள்ளிவைத்துவிட்டு ‘ஆதித்யா வர்மா’ படத்திற்காக நேரம் ஒதுக்கியுள்ளார். தன்னுடைய மகனின் அறிமுகப்படம் என்பதால் அவரே இயக்குநராக மாறி துருவ்வை நடிக்க வைத்துள்ளார்.

‘ஆதித்யா வர்மா’ படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.