தனுஷை மீண்டும் சீண்டிய சித்தார்த்…! இரண்டு பேருக்கும் நடுவுல என்ன பஞ்சாயத்து?

817

தனுஷுக்கும் சித்தார்த்துக்கும் என்ன பிரச்சனை என்று துல்லியமாக தெரியாவிட்டாலும்…

இருவருக்கும் இடையில் என்னவோ பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிஜம்…!

இராணிய மற்றும் பிரெஞ்சுப்பட பெண் இயக்குநரான மர்ஜோன் சட்ராபியின் இயக்கத்தில் உருவாகும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹு காட் டிராப்டு இன் தி கியா கப்போர்டு’ (The Extraordinary Journey Of the Fakir Who Got Trapped In The Ikea Cupboard)  என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பது பற்றி கடந்த மாதம் ட்வீட் பண்ணினார் தனுஷ்.

அவர் ட்வீட்டிய உடனே, “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் இருக்கிற ஒரு தெருநாய்க்குக் கிடைக்கணுமுன்னு எழுதி இருந்தால் அதை யாராலும் மாத்த முடியாது..” என்று நடிகர் சித்தார்த் நக்கலாக ஒரு ட்வீட்டைப் போட்டார்.

dhanush-tweet

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சந்தானம் பேசிய இந்த வசனத்தை, தனுஷ் ட்வீட் பண்ணிய அடுத்த இரண்டாவது நிமிடத்தில் சித்தார்த் ட்வீட் பண்ணியதால், அது தனுஷ் குறித்த சித்தார்த்தின் கமெண்ட்டாகவே தோன்றியது.

பிறகு அதை சித்தார்த் மறுத்தது தனிக்கதை.

இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தில் நடிப்பது பற்றி இன்று தனுஷ் ட்வீட் பண்ணினார்.

அதில் வருடக்கணக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கொடி படத்துக்குப் பிறகு இந்தப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் தனுஷ்.

(Years of discussion and finally it all boils down to “Yenai nokki paayum thotta” After kodi, my next is with Gautham vasudev menon)
அவருடைய ட்வீட்டுக்கு சித்தார்த்தின் ரியாக்ஷன் என்ன என்று காத்திருந்தோம்…

நாம் நினைத்தது போலவே…

siddarth-tweet

தன்னுடைய அடுத்தப் படத்தயாரிப்பு பற்றி சொல்வதுபோல் சித்தார்த் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.

எடாகி எண்டர்டெயின்மென்ட் நியூ ஏஜ் சினிமாவை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறது.

குறுக்கு வழியில் செல்ல மாட்டேன்…. சோம்பேறித்தனமான முடிவை தேர்வு செய்ய மாட்டேன். என்னுடைய அடுத்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் என்று ஒரு ட்வீட்டைப் போட்டிருக்கிறார் சித்தார்த்.

(#Etaki Entertainment was set up to make new age cinema. No shortcuts. No lazy choices as a producer. The next announcement is coming. SOON!)

தன்னுடைய அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பில், குறுக்கு வழியில் செல்ல மாட்டேன்…. சோம்பேறித்தனமாக முடிவை தேர்வு செய்ய மாட்டேன்..என்றெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

கௌதம் மேனன் உடன் தனுஷ் ஒரு வருடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத்தான், சோம்பேறித்தனமாக முடிவை தேர்வு செய்ய மாட்டேன் என்று சித்தார்த் குறிப்பிடுவதாக கருத்து தெரிவிக்கின்றனர் திரையுலகினர்.

குறுக்கு வழியில் செல்ல மாட்டடேன் என்பதற்கு என்ன அர்த்தம்?

வெற்றிமாறன், செல்வராகவன் படங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு கௌதம் மேனன் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்ததை குறிப்பிடுகிறார் போலிருக்கிறது.