தனுஷ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில்…. சிம்பு! – சபாஷ்.. சரியான கூட்டணி!

dhanush-award

எலியும் தவளையும் ஜோடி போட்டுக்கிட்டு தண்ணியில குதிச்ச மாதிரி சமீபகாலமாக சிம்புவும், தனுஷும் நண்பேன்டாவாக வலம் வருகிறார்கள்.

தனுஷ், சிம்புவை தம்பி என்பதும்…சிம்பு, தனுஷை அண்ணன் என்பதும்… ஒரே பாசமலர் பார்ட் – 2தான்.

இவர்களின் நட்பு தற்போது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது.

சேச்சே.. நீங்கள் நினைப்பதுபோல் தப்பாக இல்லை.

சிம்பு நடிக்கும் படத்தை தானே தயாரிப்பது என்ற தற்கொலை முயற்சியில் இறங்கி இருக்கிறார் தனுஷ்.

தயாரிப்பாளர்கள் மத்தியில் சிம்புவுக்கு உள்ள ‘நல்ல பெயர்’ பற்றி தெரிந்தும் சிம்புவை வைத்து இப்படி ஒரு விஷப்பரீட்சையில் தனுஷ் இறங்கத் துணிந்தது எப்படி?

சிம்புவுக்காக அல்ல தன் அண்ணன் செல்வராகவனுக்காகத்தான்.

சிம்பு நடிக்கும் படங்கள் சொன்ன தேதியில் ரிலீஸானதாக சரித்திரம்… பூகோளம்…இல்லை.

ஆனாலும், சிம்பு நடித்து வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கும் ‘வாலு’ படம் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளிவரவிருக்கிறது என்று உறுதியாக சொல்லிக்கொண்டிருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.

அதோடு பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம் கூட ஏப்ரல் மாத இறுதியில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடங்குவதற்கு முன் சிம்புவை வைத்து ஒரு படத்தைத் தொடங்கினார் கௌதம் மேனன்.

சில நாட்கள் படப்பிடிப்பு கூட நடைபெற்றது. பிறகு சிம்பு வேலையைக்காட்ட, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கிறதாம்.

இந்தப் படத்தை அடுத்துதான் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் சிம்பு.

‘இரண்டாம் உலகம்’ என்ற சிறப்பான படத்தை எடுத்த செல்வராகவனை இப்போது எந்த ஹீரோவும் சட்டைப் பண்ணுவதே இல்லை.

தனக்கு வாழ்க்கைக் கொடுத்த அண்ணணுக்கு இப்படி ஒரு கதியா என்ற கவலையில்தான், தன் ஆருயிர் நண்பன் சிம்பு உடன் செல்வராகவனை கூட்டணி போட வைத்திருக்கிறார் தனுஷ்.

தனுஷ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு களைகட்டப்போகிறது கச்சேரி.!

தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்சை’  சிம்புவும் செல்வராகவனும் உண்டு இல்லைன்னு ஆக்கப்போறாங்க..!