தனுஷ் பக்கிரி படத்தை வெளியிடாதது ஏன்?

78

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்சு – ஆங்கிலப் படம் ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’.

ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஜக் வார்ட்ரோபின், ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் காமெடி படமாம்.

தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டு பிரான்சில் வெளியானது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சுருக்கமாக சொல்வது என்றால் படத்தின் பட்ஜெட்டில் 10 சதவிகிதத்தைக் கூட இந்தப்படம் வசூல் செய்யவில்லை.

இந்தநிலையில் ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ படத்தை தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

இப்படம் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை முதலில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்தான் வெளியிடுவதாக அறிவித்தது.

தற்போது வுண்டர்பார் நிறுவனம் மூடப்பட்டுவிட்டதால் ‘ஒய்நாட் எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம்’ வெளியிடுகிறார் தனுஷ்.