பெண்மையை உணர்த்தும் பாடலை இரு மொழிகளில் பாடிய பிரியாங்கா Comments Off on பெண்மையை உணர்த்தும் பாடலை இரு மொழிகளில் பாடிய பிரியாங்கா

தாதா 87 திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகர் பிரியங்கா பாடியுள்ளார்.

இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார், இசையமைப்பாளர் லியான்டர் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சாருஹாசன், சரோஜா(கீர்த்தி சுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் தாதா 87 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 2018ல் படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் ‘கலை சினிமாஸ்’ முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று படத்தின் முதல் சிங்கில் டிராக் ஆறடி ஆண்டவன் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
சமந்தா உடன் நடிக்கும்போது விஷாலுக்கு சந்தோஷம்…!

Close