மனைவி வந்த நேரம் ‘டிமான்டி காலனி’ வெற்றி…! மகிழ்ச்சியில் அருள்நிதி

736

எத்தனை பேய்ப்படம் வந்தால் என்ன? ஒரு சில பேய்ப்படங்கள் மட்டுமே வெற்றியடைகின்றன.

இந்த ஆண்டு வெளியான பேய்ப்படங்களில், டார்லிங், காஞ்சனா-2 இரண்டு படங்கள்தான் கமர்ஷியல் ஹிட் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப வசூலில் சாதனை படைத்தன.

இந்த வரிசையில் அருள்நிதி நடித்து அண்மையில் வெளியான ‘டிமான்டி காலனி’ படமும் இடம் பெற்றுள்ளது.

அஜய் ஞானமுத்து எழுதி, இயக்கிய இப்படத்தை மிகப்பிரமாதமாக மார்க்கெட்டிங் செய்து மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ முரளி ராமசாமி.

மறைந்த இயக்குநர் ராமநாராயணனின் மகனான இவர், ‘காஞ்சனா-2’ படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டார்.

காஞ்சனா-2 படம் வசூலை அள்ளியதைப்போலவே ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ‘டிமான்டி காலனி’ படத்துக்கும் செம வசூல்.

படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களின் பேராதரவு பெற்று வெற்றிகரமாக ஓடி 25-ஆவது நாளை தொட்டுள்ளது.

வம்சம் படத்தில் நடிகராக அறிமுகமான அருள்நிதி அதன் பிறகு பல படங்களில் நடித்தார்.

அவற்றில் மௌனகுரு தவிர ஒரு படமும் வேலைக்கு ஆகவில்லை.

அதனால் மனதளவில் துவண்டுபோயிருந்த அருள்நிதிக்கு ஆறுதல் தரும் வகையில் நீண்டஇடைவெளிக்குப் பிறகு ‘டிமான்டி காலனி’ வெற்றியைக் கொடுத்துள்ளது.

சமீபத்தில் இல்லற வாழ்க்கையிலும் அடியெடுத்து வைத்துள்ளார் அருள்நிதி.

மனைவி வந்த நேரம் ‘டிமான்டி காலனி’ படம் மூலம் வெற்றியும் தேடி வந்திருக்கிறது!