தர்பார் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்

119

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘தர்பார்’.

இந்த படத்தின் ரஜினியுடன் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க மற்றும் இப்படத்தில் ‘யோகி’ பாபு, பாலிவுட் நடிகர் தலீப் தாஹில், நிவேதா தாமஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் கவனிக்க, அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சிலவாரங்களுக்கு முன் மும்பையில் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது.

இந்தப்படத்தை ஒரே கட்டமாக எடுக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தமுடியவில்லை.

மும்பையில் சேவியர் கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது கல்வீச்சு உட்பட அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது.

எனவே ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடத்தும் எண்ணத்தை கைவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பியது தர்பார் படக்குழு.

இந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்தது என்றும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 29-ஆம் தேதி துவங்க இருக்கிறது என்றும் தகவலை இந்த படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

‘தர்பார்’ அடுத்த (2020) ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்குத்தான் வெளியாக இருக்கிறது.

எனவே நிதானமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மும்பையில் படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம் இருப்பதால் சென்னையில் செட் போட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.