ஸ்டண்ட் மாஸ்டராகிறார் பிரபுதேவா

883

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தையும்,  சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கனும்’ படத்தையும்  தயாரித்து வரும் வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம், இவ்விரு படங்கள் திரைக்கு வருதற்கு முன்பே  பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும்  எங் மங் சங்  என்ற படத்தையும் தயாரிக்கிறது.

தேவி படத்துக்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.

நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராக வெற்றிக்கொடி கட்டியவர்.

அதற்கு பிறகு நடிகராகவும், இயக்குநராகவும் வெற்றிபெற்ற பிரபுதேவா, எங் மங் சங் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அதாவது குங்பூ சண்டைப்  பயிற்சியாளராக நடிக்கிறார்.

கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார்.

மற்றும் தங்கர்பச்சான், சித்ராலட்சுமணன், ஆர்.ஜே.பாலாஜி, பாகுபலி பிரபாகர் (கலக்கேயா),  கும்கி அஸ்வின்,  நாகேந்திரபிரசாத், முனீஸ்காந்த், காளி வெங்கட், மாரிமுத்து  ஆகியோர் நடிக்கிறார்கள்.

காஞ்சனா 2, யோகி போன்ற படங்களுக்கு  ஒளிப்பதிவு  செய்த  ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.

நடிகை ஜெயசித்ராவின் மகனும் மொட்ட கெட்ட சிவா படத்துக்கு இசையமைத்த  அம்ரீஷ் இசையமைக்கிறார்.

பாடல்களை   பிரபுதேவா, மு.ரவிகுமாரும் எழுதுகின்றனர்.

எடிட்டிங்    –  நிரஞ்சன், பாசில்

கலை   –  ராஜன்.டி

தயாரிப்பு   –  கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –   எம்.எஸ். அர்ஜுன்.

எங் மங் சங்  படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.