கூட்டணியை மாற்றிய உதயநிதி..

1128

உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’  தயாரிப்பில், எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கெசன்ட்ரா இணைந்து நடித்திருக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’படம் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாகிறது.

எழில் இயக்கத்தில் முதன் முதலாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் இது.

உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கும் முதல் படமும் இதுதான்.

ஓகே ஓகே தொடங்கி உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள  ஐந்து படங்களில் நான்கு படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை அமைத்திருந்தார்.

உதயநிதி நடிப்பில் கடைசியாக வெளியான ‘மனிதன்’ படத்துக்கு மட்டும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

இப்போது டி.இமானுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் உதயநிதி.

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் பாடல்கள் மூலம் உதயநிதியை இம்பர்ஸ் செய்துவிட்டார் டி.இமான். அதனாலோ என்னவோ உதயநிதி ஸ்டாலின், அடுத்து நடிக்கும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘இப்படை வெல்லும்’ ஆகிய படங்களுக்கும் டி.இமானே இசையமைக்கிறார்.