ஸ்டார் விஜய்யின் புத்தம் புதிய நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சி…

492

ஸ்டார் விஜய்யின் புத்தம் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி காமெடி ராஜா கலக்கல் ராணி புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஜூன் 27, 2021 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

இந்த புதுமையான நிகழ்ச்சியில் 10 நகைச்சுவை ஜோடிகள் பங்கேற்பர்.

காமெடிக்கு பெயர் போன ஸ்டார் விஜய்யின் பிரபலங்கள் ஒவ்வொரு வாரமும் பல்வேறு சுற்றுகள் மூலம் போட்டியிட்டு ரொக்கப் பரிசையும் வெல்வர்.

ஒவ்வொரு வாரமும் ஒரு சிறந்த ‘கலக்கல்’ ஜோடி தேர்ந்தெடுக்கப்படும். அவர்களின் நடிப்பின் அடிப்படையில் குறைந்த பாயிண்ட் பெறும் ஜோடி வெளியேற்றப்படும்.

ஹார்ட்-கோர் சுற்றுகள் மூலம் தக்கவைத்து வெல்லும் முதல் 4 ஜோடிகள் இறுதிப் போட்டியில் நுழைவர்.

காமெடி ராஜா கலக்கல் ராணியில் பங்கேற்கும் பிரபலமான நபர்கள்:

புகழ் – அர்ச்சனா, பாலா – ரித்திகா, ராமர் – தீபா, நிஷா – ராஜு, டி.எஸ்.கே – சுனிதா, யோகி – ஷப்னம், சதீஷ் – காயத்ரி, வினோத்பாபு – பிரணிகா, ஜெயச்சந்திரன் – அர்ச்சனா, ராஜவேலு – தர்ஷா குப்தா.

நிகழ்ச்சியின் நீதிபதிகள் மதுரை முத்து, ஐஸ்வர்யா மற்றும் பாபா பாஸ்கர். பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் ரக்ஷன் ஆகியோர் தொகுப்பாளர்கள்.

காமெடி ராஜா கலக்கல் ராணி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 1.30 மணிக்கு ஸ்டார் விஜய்-இல் ஒளிபரப்பாகிறது.