கஞ்சா குடித்த இயக்குனர் பாக்யராஜ்

38

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா.

மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள கோலா படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்கியராஜ்.

“கோலா படத்தின் விழா நாயகன் இசை அமைப்பாளர் எங்க ஊருக்காரர் என்பதால் மிகவும் சந்தோசம். பாடலுக்கு சிறப்பாக நடனத்தை ராதிகா அமைத்துள்ளார்.

கேமராமேன் மிக சிறப்பாக பேசினார். எனர்ஜி என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல மனசு சம்பந்தப்பட்டது.

கஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார். நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன்.

சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லவே வேலை செய்யும்.

ஒருநாள் அது கிர்ருன்னு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன்.

லைப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே.

ஆனால் இப்படி இருக்கோமே என்று அன்று தான் தோன்றியது. புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது.

இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன்.

தருண் மாஸ்டர் நல்லா பண்றார் என்று என் படத்திற்கு கூப்பிட்டேன்.

என் ரூமை சுற்றி சுற்றி பார்த்தார்.

ஏன் என்று கேட்டதற்கு, “இல்லை எப்படியாவது இந்த ஆபிஸுக்கு வரவேண்டும் என்பது என் கனவு” என்றார்.

அவர் தொழிலை தொழிலாக செய்யக்கூடியவர். போலீஸ்காரர் கதை எழுதி படம் இயக்கி இருப்பதால் இந்த கோலா படத்தில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கும்” என்றார்.