‘டூலெட்’ இயக்குநரின் அடுத்தப்படம் என்ன?

73

பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ‘டூலெட்’.

சினிமா உதவி இயக்குனருக்கு வாடகைக்கு குடியிருக்க வீடு கிடைப்பதில் உள்ள சிக்கலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் பல்வேறு சுமார் 30க்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் அள்ளியது.

அதே நேரம் இப்படத்திற்கு தமிழகத்திலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

50 நாட்களைக் கடந்து ஓடி இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த படத்தின் மூலம் இயக்குநராக வெற்றிபெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் அடுத்து எந்த படத்தை இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் செழியன் அடுத்து த்ரில்லர் ரக கதை ஒன்றை இயக்க உள்ளார் என்றும் இந்த கதையில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கினையும், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷையும் நடிக்க வைத்து இயக்க உள்ளார் என்ற தகவல் அடிபடுகிறது.

செழியன் தரப்பில் கேட்டால், வெளிநாடுவாழ் தமிழர் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், அது புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்களின் கதை என்றும் சொல்கிறார்கள்.

இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.

இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.