ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. – சேரன் விளக்கம்

484


கன்னா பின்னா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சேரன், “இலங்கை தமிழர்கள்தான் திருட்டு விசிடிக்கு துணைபோகிறார்கள்” என்றும் “இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்றும் பேசினார்.

அவரதுபேச்சு உலகம் முழுக்க உள்ள இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இங்குள்ள ஈழ ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

அது மட்டுமல்ல சேரனின் பேச்சை கண்டிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் பொங்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் ஒரு அறிக்கையை அனுப்பி இருக்கிறார்….

“என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன் யாரைப்பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும்…

என்னைத்தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது….

இதுவரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது…

ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களை அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை..

அப்போ எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா…

உலகெங்கும் நண்பர்களை கொண்டு (அவர்களும் இலங்கைத்தமிழர்கள்தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்…

ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு…

நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள்…

சேரன்
இயக்குனர்