‘சென்னையில் திருவையாறு’ இசைவிழா நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன்

472

வெற்றிகரமான 15 வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி, இந்த ஆண்டும் வெகுசிறப்பாக துவங்கியது.

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்கள் குத்து விளக்கேற்ற, தமது எழுத்தால் திரையுலகை வென்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் தத்ரூபமான மெழுகு சிலையை பின்னணி பாடகி பி சுசீலா திறந்து வைக்க, சிறப்பு விருந்தினர்களாக கவியரசரின் புதல்வர் காந்தி கண்ணதாசன், ஆர். ராம் விக்னேஷ், டிரீம் சொல்லுஷன்ஸ், ஆர். பிரதாப் குமார், ஆணையர், தகவல் அறியும் உரிமை சட்டம், ஜோதி முருகன், வேல்ஸ் பல்கலைகழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ், ராமமூர்த்தி, அருள்முருகன் குழுமம், சுப்பையா பாரதி, இயக்குனர், எஸ் ஆர் எம் பொறியியல் கல்லூரி, இளங்கோவன், டி என் சி சிட்ஸ், ஆர் மாரிமுத்து, தலைவர், டிரான்ஸ் இந்தியா ரிசார்ட்ஸ் மற்றும் இசை விமர்சகர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழா டிசம்பர் 18 இன்று முதல் எட்டு நாட்களுக்கு அதாவது டிசம்பர் 25 வரை, காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.